/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/சுதந்திரமாக செயல்பட வேண்டும்: பெண் பிரதிநிதிகளுக்கு அறிவுரைசுதந்திரமாக செயல்பட வேண்டும்: பெண் பிரதிநிதிகளுக்கு அறிவுரை
சுதந்திரமாக செயல்பட வேண்டும்: பெண் பிரதிநிதிகளுக்கு அறிவுரை
சுதந்திரமாக செயல்பட வேண்டும்: பெண் பிரதிநிதிகளுக்கு அறிவுரை
சுதந்திரமாக செயல்பட வேண்டும்: பெண் பிரதிநிதிகளுக்கு அறிவுரை
ADDED : ஜன 10, 2024 11:50 PM

அன்னூர் : 'உள்ளாட்சி பெண் பிரதிநிதிகள், பிற ஊராட்சிகளுடன் போட்டியிட்டு பணியாற்ற வேண்டும்,' என புத்தாக்க பயிற்சி வகுப்பில் அறிவுறுத்தப்பட்டது.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில், அன்னூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் பெண் பிரதிநிதிகளுக்கான இரண்டு நாள் பயிற்சி வகுப்பு நேற்று துவங்கியது. இதில் பொகலூர், வடக்கலூர், வடவள்ளி, கஞ்சப்பள்ளி, பிள்ளையப்பம்பாளையம் ஊராட்சிகளை சேர்ந்த பெண் வார்டு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
முதன்மை பயிற்சியாளர் பாலமுருகு பேசுகையில், பெண் உள்ளாட்சி பிரதிநிதிகள் தங்கள் ஊராட்சியில் உள்ள வளங்கள் குறித்து முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும், பிற ஊராட்சிகளுடன் போட்டி போட்டுக்கொண்டு பணியாற்ற வேண்டும், என்றார்.
பயிற்சியாளர் யசோதா பேசுகையில், தங்கள் ஊராட்சியில் பெண்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டும். பெண்கள் அதிகமாக பணி புரியும் தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களில் தனி கழிப்பறை, குழந்தைகளுக்கான பாதுகாப்பிடம் உள்ளதா என கண்காணிக்க வேண்டும். பெண்கள் கல்வி கற்பதை ஊக்குவிக்க வேண்டும்.
பெண்களுக்கான அரசு நலத்திட்டங்கள் குறித்து தெரிந்து கொண்டு, அதில் அவர்கள் பயன்பெற உதவ வேண்டும். ஊராட்சி அளவிலான வளர்ச்சி திட்டம் தயாரிக்கும் திறன் பெற்று இருக்க வேண்டும். பிறருடைய தலையீடு இல்லாமல் சுதந்திரமாக செயல்பட வேண்டும், என்றார்.
புத்தாக்க பயிற்சியை வட்டார வளர்ச்சி அலுவலர் லதா துவக்கி வைத்தார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சொர்ணவேலம்மாள், பீமன், ஜெயராஜ், விஜயலட்சுமி உள்ளிட்டோர் பேசினர்.