/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/கூட்டுறவு தொழிற்சாலைகளின் பிரச்னைகளை களைய தனி குழு அவசியம்! அரசு தனி கவனம் செலுத்தினால் அங்கத்தினருக்கு பயன்கூட்டுறவு தொழிற்சாலைகளின் பிரச்னைகளை களைய தனி குழு அவசியம்! அரசு தனி கவனம் செலுத்தினால் அங்கத்தினருக்கு பயன்
கூட்டுறவு தொழிற்சாலைகளின் பிரச்னைகளை களைய தனி குழு அவசியம்! அரசு தனி கவனம் செலுத்தினால் அங்கத்தினருக்கு பயன்
கூட்டுறவு தொழிற்சாலைகளின் பிரச்னைகளை களைய தனி குழு அவசியம்! அரசு தனி கவனம் செலுத்தினால் அங்கத்தினருக்கு பயன்
கூட்டுறவு தொழிற்சாலைகளின் பிரச்னைகளை களைய தனி குழு அவசியம்! அரசு தனி கவனம் செலுத்தினால் அங்கத்தினருக்கு பயன்
ADDED : செப் 09, 2025 09:47 PM

ஊட்டி; 'நீலகிரி மாவட்டத்தில் நஷ்டத்தில் இயங்கும் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளை மேம்படுத்தும் வகையில், அரசு கவனம் செலுத்தி, தனி குழு அமைத்து ஆய்வு மேற்கொண்டால், நஷ்டத்தில் இருந்து மீட்க முடியும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில், 'மஞ்சூர், பிக்கட்டி, கிண்ணக்கொரை, எடக்காடு, இத்தலார், நஞ்சநாடு, எப்பநாடு, கட்டபெட்டு,' உள்ளிட்ட, 17 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன.
அங்கத்தினர்களாக உள்ள விவசாயிகள் தங்களது தேயிலை தோட்டத்தில் பறிக்கும் பசுந்தேயிலையை அந்தந்த தொழிற்சாலைக்கு வினியோகிக்கின்றனர். அவர்கள் வினியோகிக்கும் இலைக்கு முதலில் முன் பணம் வழங்கப்படுகிறது.
அதன்பின், தேயிலை வாரியம் மாதாந்திர விலை நிர்ணயித்தபின், மீதமுள்ள தொகை 'செட்டில்மென்ட்' தொகையாக வழங்கப்படுகிறது.
செட்டில்மென்ட் தொகை தாமதம் இங்குள்ள பெரும்பாலான தொழிற்சாலைகளில் அங்கத்தினர்கள் வினியோகித்த பசுந்தேயிலைக்கு முன் பணம் கொடுக்கப்படுகிறது. 'செட்டில்மென்ட்' தொகை மாத கணக்கில் இழுத்தடிக்கப்படுகிறது. இதை நம்பியுள்ள விவசாயிகள் குறிப்பிட்ட நேரத்திற்கு 'செட்டில்மென்ட்' தொகை கிடைக்காததால் அத்தியாவசிய தேவையை நிறைவேற்ற முடியாமல் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளனர். தொழிற்சாலை நிர்வாகத்திடம் முறையிட்டாலும் நிதி நிலைமையை காரணம் கூறி, இழுத்தடித்து வருகின்றனர்.
தனியாருக்கு இலை வினியோகம் பல நாட்கள் நடையாய் நடந்து வெறுத்து போன அங்கத்தினர்கள் வேறு வழியின்று தனியார் தேயிலை தொழிற்சாலைகளை நாடி செல்கின்றனர். தனியார் தொழிற்சாலை நிர்வாகங்களும், சில நேரங்களில் சரி வர இலை வினியோகித்திற்காக பணம் வழங்குவதில்லை. இதன் காரணமாக விவசாயிகள் செய்வதறியாமல் தவித்து வருகின்றனர்.
மறுபுறம், போதிய பசுந்தேயிலை கொள்முதல் செய்ய முடியால் செலவினங்களை தாக்கு பிடிக்க முடியாமல், கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை நிர்வாகங்கள் தள்ளாட்டத்தில் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன.
அங்கத்தினர்கள் கூறுகையில், 'கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளை தாய் வீடாக கருதி, இலை முழுவதையும் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைக்கு வினியோகித்து வருகிறோம்.
தொழிற்சாலை நிர்வாகங்கள் பல கோடி ரூபாயில் புனரமைப்பு பணிகள் மேற்கொண்டுள்ளனர். இந்த பணிக்காக, வங்கிகளில் கடன் பெற்றுள் ளனர். தேயிலை ஏலத்திற்கு பின் வரும் தொகையை முதலில் வங்கிகள் பிடித்தம் செய்கின்றன. அதில், சில தொழிற்சாலைகள் தவணை தொகையை சரியாக கட்டாததால் பல லட்சம் ரூபாய் கூடுதல் வட்டியும் கட்டி வருகின்றனர்.
இதன் காரணமாக, அங்கத்தினர்கள் வினியோகித்த பசுந்தேயிலைக்கு, 2 கோடி ரூபாய் வரை பணம் வழங்காமல் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது. எனவே, அரசு தனி கவனம் செலுத்தி, தனி குழு அமைத்து ஆய்வு மேற்கொண்டால், மலை மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு தொழிற்சாலைகளை நஷ்டத்தில் இருந்து மீட்டு முன்னேற்ற பாதையில் கொண்டு வர முடியும்,' என்றனர்.