/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/விதிமீறி செயல்படும் காட்டேஜ்களின் பட்டியல் தயார்! சிறப்பு குழு அமைக்கப்பட்டு ஆய்வு பணிகள் தீவிரம்விதிமீறி செயல்படும் காட்டேஜ்களின் பட்டியல் தயார்! சிறப்பு குழு அமைக்கப்பட்டு ஆய்வு பணிகள் தீவிரம்
விதிமீறி செயல்படும் காட்டேஜ்களின் பட்டியல் தயார்! சிறப்பு குழு அமைக்கப்பட்டு ஆய்வு பணிகள் தீவிரம்
விதிமீறி செயல்படும் காட்டேஜ்களின் பட்டியல் தயார்! சிறப்பு குழு அமைக்கப்பட்டு ஆய்வு பணிகள் தீவிரம்
விதிமீறி செயல்படும் காட்டேஜ்களின் பட்டியல் தயார்! சிறப்பு குழு அமைக்கப்பட்டு ஆய்வு பணிகள் தீவிரம்
ADDED : செப் 17, 2025 08:45 PM

ஊட்டி; நீலகிரி மாவட்டத்தில் அனுமதியின்றியும், விதிமீறி காட்டேஜ் போல செயல்பட்டு, அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும், கட்டடங்களுக்கு 'சீல்' வைக்க, வருவாய், நகராட்சி, சுற்றுலா துறைகள் ஒருகிணைந்து சிறப்பு குழு அமைக்கப்பட்டு ஆய்வு பணி நடந்து வருகிறது.
நீலகிரி மாவட்டம் மலைப்பகுதியாக இருப்பதால், அதன் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கும், நிலச்சரிவு போன்ற பேரிடர்களை தடுப்பதற்கும், 1993ல் கொண்டு வரப்பட்ட மாஸ்டர் பிளான் சட்டம் கொண்டு வரப்பட்டு கட்டுமான பணிகள் கட்டுப்படுத்தப்பட்டன. எனினும், இங்கு விதிமுறைகளை மீறியும், அனுமதியின்றி கட்டப்படும் கட்டடங்கள் அதிகரித்து வருகின்றன. மேலும், வீடுகளை விதிகளை மீறி காட்டேஜ்களாக கட்டப்பட்ட கட்டடங்கள் எண்ணிக்கை நாளுக்கு, நாள் அதிகரித்துள்ளது.
ஐகோர்ட் உத்தரவின் கீழ் குழு அமைப்பு இது போன்ற கட்டுமானங்களை கட்டுப்படுத்தவும், அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் வகையில், செயல்படும் சுற்றுலா விடுதிகள், காட்டேஜ்களை வரன்முறைபடுத்தும் வகையிலும், ஐகோர்ட் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இதை தொடர்ந்து, விதிமீறிய புற்றீசல் போல பெருகி வரும் காட்டேஜ்கள் குறித்து பட்டியலை எடுக்கவும், அதில், அரசின் விதிகளையும் பின்பற்றாமல் உள்ளவற்றை 'சீல்' வைக்கும் வகையில், மாவட்ட நிர்வாகம், வருவாய், நகராட்சி, சுற்றுலா துறை அதிகாரிகளை கொண்ட சிறப்பு குழுவை அமைத்தது.
இந்த குழுவினர் ஊட்டி உட்பட சில பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு, 800 கட்டடங்கள் கொண்ட காட்டேஜ்களின் பட்டியலை தயார் செய்து, ஆய்வு நடத்தி வருகின்றனர். இதுவரை, ஊட்டி, குன்னுார், மஞ்சூர், மசினகுடி உட்பட சில பகுதிகளில் பல சுற்றுலா விடுதி கட்டடங்களுக்கு 'சீல்' வைத்துள்ளனர். இதனை மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தலைமையில், மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் தலைமையில், வருவாய், நகராட்சி மற்றும் சுற்றுலா வளர்ச்சி அதிகாரிகள் ஆய்வு செய்து அரசுக்கும், ஐகோர்ட்டுக்கும் அறிக்கை சமர்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கலெக்டர் லட்சுமி பவ்யா கூறுகையில், '' ஐகோர்ட் உத்தரவுப்படி, மாவட்டத்தில், வருவாய், நகராட்சி, சுற்றுலா வளர்ச்சி கழகம் என, மூன்று துறைகள் இணைந்து, அனுமதியில்லாமலும், விதிகளை மீறி, வர்த்தக ரீதியாக சுற்றுலா காட்டேஜ்களாக செயல்படும் கட்டடங்களை அடையாளம் காணப்பட்டு நடடிக்கை எடுக்கும் பணி நடந்து வருகிறது.
கடந்த இரு மாதங்களில், 25 கட்டடங்களுக்கு ' சீல் ' வைக்கப்பட்டுள்ளது. மாவட்ட முழுவதும் ஆய்வு பணிகள் தொடர்ந்து நடக்கிறது. விதிமீறிய கட்டடங்கள் அடையாளம் காணப்பட்டு, உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு ' சீல்' வைக்கும் பணி தொடர்கிறது. இனி சுற்றுலா விடுதிகள், காட்டேஜ் நடத்துபவர்கள் அரசின் விதிகளை நிச்சயமாக பின்பற்ற வேண்டும்,'' என் றார்.