/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ சாலையில் சாய்ந்த ஈட்டி மரம் போக்குவரத்து பாதிப்பு சாலையில் சாய்ந்த ஈட்டி மரம் போக்குவரத்து பாதிப்பு
சாலையில் சாய்ந்த ஈட்டி மரம் போக்குவரத்து பாதிப்பு
சாலையில் சாய்ந்த ஈட்டி மரம் போக்குவரத்து பாதிப்பு
சாலையில் சாய்ந்த ஈட்டி மரம் போக்குவரத்து பாதிப்பு
ADDED : மே 21, 2025 10:58 PM

கூடலுார், ; கூடலுார் - கோழிக்கோடு சாலையில், ஈட்டி மரம் சாய்ந்ததால், மூன்று மாநிலங்கள் இடையே ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கூடலுார் பகுதியில் நேற்று முன்தினம் காலை சிறிது நேரம், மழை பெய்தது. இந்நிலையில், ஆமைக்குளம் அருகே, கோழிக்கோடு சாலையோரம் இருந்த ஈட்டி மரம், காலை, 11:30 மணிக்கு சாலையில் சாய்ந்து வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், நீலகிரி, கேரளா, கர்நாடக இடை இயக்கப்படும் வாகனங்கள் சாலையின் இரு புறமும் நீண்ட வரிசையில் நிறுத்தப்பட்டது.
பயணிகள் சிரமத்துக்கு ஆளாகினர். நாடுகாணி வனத்துறையினர், மரத்தை வெட்டி அகற்றினர். மதியம், 12:30 மணிக்கு தேவாலா ஹைவே போலீசார் வாகன போக்குவரத்தை சீரமைத்தனர். இதனால், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.