குழிவயல் சாலையில் தடுமாறும் பயணம்
குழிவயல் சாலையில் தடுமாறும் பயணம்
குழிவயல் சாலையில் தடுமாறும் பயணம்
ADDED : ஜூலை 02, 2025 08:32 PM

பந்தலுார்:
பந்தலுார் அருகே சேரங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட குழிவயல் பகுதிக்கு செல்லும் சாலை வயல்வெளியாக மாறியதால் பாதசாரிகள் பயணிப்பதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது.
பந்தலுார் சேரங்கோடுஅருகே குழிவயல் கிராமம் அமைந்துள்ளது. இங்கு பழங்குடியின மக்கள் உள்ளிட்ட, 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். சேரம்பாடி சுங்கம் பகுதியில் இருந்து புஞ்சைக்கொல்லி செல்லும் சாலையிலிருந்து இந்த கிராமத்திற்கு செல்லும் சாலை பிரிந்து செல்கிறது.
வனத்திற்கு மத்தியில் செல்லும் இந்த சாலையில் வாகனங்கள் ஏதும் செல்லாத நிலையில், சுமார் ஒரு கிலோ மீட்டர் துாரம் மக்கள் நடந்து செல்கின்றனர்.
தற்போது, கிராமத்தை ஒட்டிய வனப்பகுதியில் ஊராட்சி குப்பை கழிவுகளை கொட்டுவதற்கு மற்றும் குப்பை லாரிகள் சென்று வருகிறது. கற்கள் பதிக்கப்பட்ட நிலையில் சாலை சீரமைத்து பல ஆண்டுகள் கடந்ததால், தற்போது கற்கள் முழுமையாக பெயர்ந்து, குழிகளாக மாறி குழிவயல் கிராமத்திற்குச் செல்லும் மக்கள் நடந்து செல்ல முடியாத சூழலில் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த சாலை ஓரத்தில் பகல் நேரங்களிலும் யானை மற்றும் சிறுத்தைகள் வந்து செல்லும் நிலையில், தினசரி வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் மற்றும் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் நடந்து செல்லும் போது வனவிலங்குகள் ஏதேனும் வந்தால் ஓடி தப்ப கூட முடியாத நிலையில் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, ஊராட்சி நிர்வாகம் இதனை சீரமைத்து தர முன் வர வேண்டும்.