/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ 768 பழங்குடியின பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா; 47 ஆண்டுக்கு பின் கிடைத்ததால் மகிழ்ச்சி 768 பழங்குடியின பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா; 47 ஆண்டுக்கு பின் கிடைத்ததால் மகிழ்ச்சி
768 பழங்குடியின பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா; 47 ஆண்டுக்கு பின் கிடைத்ததால் மகிழ்ச்சி
768 பழங்குடியின பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா; 47 ஆண்டுக்கு பின் கிடைத்ததால் மகிழ்ச்சி
768 பழங்குடியின பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா; 47 ஆண்டுக்கு பின் கிடைத்ததால் மகிழ்ச்சி
ADDED : ஜூன் 09, 2025 12:47 AM

ஊட்டி; ஊட்டியில், 768 பழங்குடியின பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில், தோடர், கோத்தர், இருளர், குரும்பர், பனியர் மற்றும் காட்டுநாயக்கர் பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு, வீட்டு மனை பட்டா வழங்கப்படாமல் இருந்தது. 47 ஆண்டுகளுக்கு பிறகு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில், மாநில முதல்வர் உத்தரவு படி, வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி, ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடந்தது.
நீலகிரி எம்.பி., ராஜா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, 768 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கி பேசியதாவது, 'ஐரோப்பா, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளில், அனைத்து சுற்றுலா தலங்களையும் கண்டு ரசித்து மீண்டும் அதே இடத்தில் இறங்கி விடுவது போல், நீலகிரி மாவட்டத்திலும், 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில், ஒரே கட்டணத்தில் மாவட்ட முழுவதும் உள்ள அனைத்து சுற்றுலாத் தலங்களையும் கண்டு ரசிக்கும் வகையில், விரைவில் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். நாள்தோறும் சுற்றுலா பயணிகளின் வருகையுடன், வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
போதிய 'பார்க்கிங்' வசதி இல்லாததால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில், 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஊட்டியில் 'மல்டி பிளக்ஸ் பார்க்கிங்' வசதி ஏற்படுத்தப்படும்.'' என்றார்.
நிகழ்ச்சியில், அரசு தலைமை கொறடா ராமச்சந்திரன், கலெக்டர் லட்சுமி பவ்யா உட்பட, அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.