/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ ஆவணங்களின்றி கடத்தி வந்த 606 கிராம் நகை பறிமுதல் ஆவணங்களின்றி கடத்தி வந்த 606 கிராம் நகை பறிமுதல்
ஆவணங்களின்றி கடத்தி வந்த 606 கிராம் நகை பறிமுதல்
ஆவணங்களின்றி கடத்தி வந்த 606 கிராம் நகை பறிமுதல்
ஆவணங்களின்றி கடத்தி வந்த 606 கிராம் நகை பறிமுதல்
ADDED : அக் 06, 2025 10:42 PM
பாலக்காடு;பாலக்காடு அருகே, ஆவணங்களின்றி கடத்தி வந்த 606.6 கிராம் தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் பொள்ளாச்சி - -திருச்சூர் தேசிய நெடுஞ்சாலை, கோவிந்தாபுரம் சோதனைச்சாவடியில், அகளி எஸ்.ஐ. ராஜேஷின் தலைமையிலான போலீஸ் படையும், மாவட்ட போதை தடுப்பு பிரிவும் ஒருங்கிணைந்து. இரவு வாகன சோதனை நடத்தி வந்தனர்.
அப்போது, பொள்ளாச்சி பகுதியில் இருந்து திருச்சூர் நோக்கி வந்த கேரளா அரசு பஸ்சில், பயணியரிடம் நடத்திய சோதனையில், திருச்சூர் மாவட்டம் பெருஞ்சேரி பகுதியைச் சேர்ந்த ஆண்டணி, 53, புதுக்குளங்கரை பாடம் பகுதியைச் சேர்ந்த பிஜித் 28, ஆகியோரின் பையில், ஆவணங்களின்றி, 606.6 கிராம் தங்க நகைகள் மறைத்து வைத்திருப்பது கண்டுபிடித்தனர்.
இதையடுத்து அவர்களை கைது செய்து, தொடர் விசாரணைக்காக பறிமுதல் செய்த தங்க நகைகளுடன் வருமான வரித்துறையிடம் ஒப்படைத்தனர்.


