Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/60 சிம்கார்டு பதிவுகள் குஜராத்தில் ஆய்வு

60 சிம்கார்டு பதிவுகள் குஜராத்தில் ஆய்வு

60 சிம்கார்டு பதிவுகள் குஜராத்தில் ஆய்வு

60 சிம்கார்டு பதிவுகள் குஜராத்தில் ஆய்வு

ADDED : ஜன 06, 2024 01:36 AM


Google News
ஊட்டி;'கோடநாடு வழக்கில், 19 மொபைல் போன் டவர்கள், 60 சிம்கார்டு பதிவுகள் குஜராத் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது' என, அரசு வக்கீல் கூறினார்.

நீலகிரி மாவட்டம், ஊட்டி செஷன்ஸ் கோர்ட்டில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை நடந்து வருகிறது. நேற்று, சி.பி.சி.ஐ.டி., ஏ.டி.எஸ்.பி., முருகவேல் தலைமையில் போலீசார் மற்றும் அரசு தரப்பு வக்கீல்கள் ஷாஜகான், கனகராஜ் கோர்ட்டில் ஆஜராகினர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் சயான், வாளையார் மனோஜ், உதயகுமார் ஆகியோர் ஆஜராகினர்.

வழக்கு செஷன்ஸ் கோர்ட் நீதிபதி அப்துல் காதர் முன்னிலையில் நடந்தது.

விசாரணைக்கு பின், அரசு வக்கீல் ஷாஜகான் நிருபர்களிடம் கூறியதாவது:

கோடநாடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களாக சேர்க்கப்பட்டுள்ள பிஜின் குட்டி, ஜம்சீர் அலி ஆகியோரின், 8 மொபைல் போன் உரையாடல்களை கொண்டு சேகரிக்கப்பட்ட அறிக்கையை படிப்பதுடன், மேலும் பலரிடம் விசாரணை நடத்த வேண்டியுள்ளது.

அரசு தரப்பு மூலம் இவ்வழக்கு சம்மந்தமாக, கோவை ஆய்வகத்திற்கு அனுப்பபட்ட ரெக்கவரி செய்யப்பட்ட ஆய்வு அறிக்கையை வழங்கினால் அடுத்தகட்ட விசாரணை மேற்கொள்ளப்படும்.

வழக்கு தொடர்பாக, 19 மொபைல் போன் டவர்கள் மற்றும் 60 சிம்கார்டு பதிவுகள் குஜராத் ஆய்வகத்திற்கு கோர்ட் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. அந்த ஆய்வறிக்கை கிடைத்தவுடன் அதனடிப்படையில் விசாரணை விரிவுபடுத்தப்படும்.

இவ்வாறு, அவர் கூறினார். வழக்கை நீதிபதி அப்துல் காதர், பிப்., 9ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us