/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/வன எல்லையில் 50 கி.மீ., தீ தடுப்பு கோடு; முதுமலையில் பழங்குடியினருக்கு பணிவன எல்லையில் 50 கி.மீ., தீ தடுப்பு கோடு; முதுமலையில் பழங்குடியினருக்கு பணி
வன எல்லையில் 50 கி.மீ., தீ தடுப்பு கோடு; முதுமலையில் பழங்குடியினருக்கு பணி
வன எல்லையில் 50 கி.மீ., தீ தடுப்பு கோடு; முதுமலையில் பழங்குடியினருக்கு பணி
வன எல்லையில் 50 கி.மீ., தீ தடுப்பு கோடு; முதுமலையில் பழங்குடியினருக்கு பணி
ADDED : ஜன 10, 2024 10:36 PM

கூடலுார் : முதுமலையில், வனத்தீ ஏற்படுவதை தடுக்க முதல் கட்டமாக தமிழக-கர்நாடக வன எல்லையில் 50 கி.மீ., தூரம் தீ தடுப்பு கோடுகள் அமைக்கும் பணியை வனத்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.
கூடலுார், முதுமலை புலிகள் காப்பகம் உள்ளிட்ட பல பகுதிகளில் கடந்த ஆண்டு எதிர்பார்த்த பருவமழை பெய்யவில்லை. இதனால், கோடைக்கு முன்பாகவே வறட்சியின் தாக்கம் ஏற்படும் சூழல் உள்ளது.
முதுமலை புலிகள் காப்பகத்தில் தொடரும் பனி பொழிவால், கோடைக்கு முன்பாகவே வறட்சியின் தாக்கம் துவங்கியுள்ளது. இதனால், தாவரங்கள் பசுமை இழந்து வனவிலங்குகளுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்பட்டு, வனத்தீ அபாயம் ஏற்பட்டுள்ளது.வனத்தீயை தடுக்க முதல் கட்டமாக, தமிழக- கர்நாடக வன எல்லையான தெப்பக்காடு வனச்சரகத்தில் 28 கி.மீ; நிலக்கோட்டை வனச்சரகத்தில், 12 கி.மீ; முதுமலை வனச்சரகத்தில், 8 கி.மீ., துாரம் வரை, தீ தடுப்பு கோடுகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இப்பணியில் பழங்குடியினர் ஈடுபட்டு வருகின்றனர்.
வனத்துறையினர் கூறுகையில்,'கோடையில், கர்நாடக மாநில பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் ஏற்படும் வனத்தீ, முதுமலை வனப்பகுதிக்குள் பரவுவதை தடுக்க, முன்னெச்சரிக்கையாக, மாநில வன எல்லையில், 16 மீட்டர் அகலத்தில், 50 கி.மீ., துாரம் தீ தடுப்பு கோடு அமைத்து வருகிறோம்,' என்றனர்.