Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ நாய் கண்காட்சியில் 45 வகை நாய்கள் பங்கேற்பு; பார்வையாளரை கவர்ந்த ராணுவத்தில் சிறப்பு பெற்ற 'பாக்ஸ் ஹவுண்ட்'

நாய் கண்காட்சியில் 45 வகை நாய்கள் பங்கேற்பு; பார்வையாளரை கவர்ந்த ராணுவத்தில் சிறப்பு பெற்ற 'பாக்ஸ் ஹவுண்ட்'

நாய் கண்காட்சியில் 45 வகை நாய்கள் பங்கேற்பு; பார்வையாளரை கவர்ந்த ராணுவத்தில் சிறப்பு பெற்ற 'பாக்ஸ் ஹவுண்ட்'

நாய் கண்காட்சியில் 45 வகை நாய்கள் பங்கேற்பு; பார்வையாளரை கவர்ந்த ராணுவத்தில் சிறப்பு பெற்ற 'பாக்ஸ் ஹவுண்ட்'

ADDED : ஜூன் 15, 2025 11:52 PM


Google News
Latest Tamil News
குன்னுார்; நீலகிரீஸ் கென்னல் சங்கம் சார்பில் குன்னுாரில் இரு நாட்கள் நடந்த நாய்கள் கண்காட்சியில், 45 வகைகளை சேர்ந்த, 300 நாய்கள் பங்கேற்றன.

நீலகிரி மாவட்டம், குன்னுார் பிராவிடன்ஸ் கல்லுாரி மைதானத்தில், நீலகிரீஸ் கென்னல் சங்கம் சார்பில், 2 நாட்கள் நாய்கள் கண்காட்சி நடந்தது. முதல் நாளில், 138 ஜெர்மன் ஷெப்பர்ட் நாய்கள் பங்கேற்றன. நேற்று நடந்த கண்காட்சியில், அனைத்து ரக நாய்களுக்கான போட்டிகள் நடத்தப்பட்டன.

அதில், 'ராஜபாளையம், காரவன்ஹவுண்ட், பாக்ஸ் ஹவுண்ட், டாபர்மேன், ஷாம்பெயின் பூடில்ஸ், பெல்ஜியம் மெலனாய், இங்கிலீஷ் புல்டாக், இமாலயன் சீப், பாக்ஸர், பீகிள், மஸ்தீப்,' உட்பட, 45 வகை நாய்கள் பங்கேற்றன. அதில், மினியேச்சர் வகை நாய்கள் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

ராணுவத்தில் பயன்படும் நாய்


நீலகிரீஸ் கென்னல் சங்க தலைவர் லஜபதி கூறுகையில், ''அந்த காலத்தில் வெளிநாட்டு நாய்களுக்கு மட்டுமே மோப்ப சக்தி என கூறினர். ஆனால், நமது நாட்டின், பாக்ஸ் ஹவுண்ட் நாய்க்கு மோப்ப சக்தி அதிகம். ரோமமும் குறைவு. எதிரியை வீழ்த்தி, வீரர்களின் உயிரை காப்பாற்றுவதால், ராணுவத்தில் இந்த வகை நாய் பயன்படுத்தப்படுகிறது.

நீலகிரியின் சிறந்த காலநிலையில் தேசிய மற்றும் சர்வதேச சிறந்த பயிற்சியாளர்கள் பங்கேற்ற, 5வது நாய்கள் கண்காட்சியில், 300 நாய்கள் பங்கேற்றன. புதிய நாய் பிரியர்களை ஊக்குவிக்கவும், நாய்களின் இனப்பெருக்கம், பயிற்சி அளித்தல் பொறுப்புடன் வளர்த்தல் குறித்த விழிப்புணர்வுக்காகவும் கண்காட்சி நடத்தப்பட்டுள்ளது. வரும் செப்., மீண்டும் நடத்த முடிவு செய்யப்பட்டது. பரிசு பெற்ற நாய்களின் முழு பட்டியல் நாளை (இன்று) அறிவிக்கப்படும்,'' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us