/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/40 பயனாளிகளுக்கு ரூ. 498.97 லட்சம் கடனுதவி40 பயனாளிகளுக்கு ரூ. 498.97 லட்சம் கடனுதவி
40 பயனாளிகளுக்கு ரூ. 498.97 லட்சம் கடனுதவி
40 பயனாளிகளுக்கு ரூ. 498.97 லட்சம் கடனுதவி
40 பயனாளிகளுக்கு ரூ. 498.97 லட்சம் கடனுதவி
ADDED : பிப் 23, 2024 11:29 PM

ஊட்டி;ஊட்டியில் நடந்த கடன் வழங்கும் நிகழ்ச்சியில், மாவட்ட தொழில் மையம் சார்பில், 40 பயனாளிகளுக்கு, 498.97 லட்சம் ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டது.
நம் மாவட்டத்தில், வியாபாரம் சேவை மற்றும் உற்பத்தி தொழில்கள் தொடங்க ஆர்வம் உடைய தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, அவர்களுக்கு தேவையான கடன் வசதி ஏற்படுத்தி தரும் வகையில், வங்கி கடன் வழிகாட்டுதல் முகாம் ஊட்டியில் நடந்தது.
'முகாமில் பெறப்படும் தகுதியான விண்ணப்பங்கள், வங்கிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு, சுயதொழில் துவங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,' என, தெரிவிக்கப்பட்டது.
மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி தலைமை வகித்து, மாவட்ட தொழில் மையம் சார்பில், 40 பயனாளிகளுக்கு, 498.97 லட்சம் ரூபாய் கடன் மற்றும் 98.08 லட்சம் ரூபாய் மானியமாக வழங்கினார்.
மேலும், தமிழ்நாடு மகளிர் திட்டம் சார்பில், 10 பயனாளிகளுக்கு, 119.50 லட்சம் ரூபாய் தொழில் துவங்க கொடுக்கப்பட்டு ஊக்குவிக்கப்பட்டனர்.
மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சண்முக சிவா, முன்னோடி வங்கி மேலாளர் சசிகுமார், தாட்கோ மேலாளர் ரவிச்சந்திரன், மகளிர் திட்ட அலுவலர் காசிநாதன் உட்பட பலர் பங்கேற்றனர். மாவட்ட தொழில் மைய மேலாளர் திலகவதி நன்றி கூறினார்.