/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/பள்ளியில் 135வது ஆண்டு விழா; சுற்றுச்சூழலை காக்க விழிப்புணர்வுபள்ளியில் 135வது ஆண்டு விழா; சுற்றுச்சூழலை காக்க விழிப்புணர்வு
பள்ளியில் 135வது ஆண்டு விழா; சுற்றுச்சூழலை காக்க விழிப்புணர்வு
பள்ளியில் 135வது ஆண்டு விழா; சுற்றுச்சூழலை காக்க விழிப்புணர்வு
பள்ளியில் 135வது ஆண்டு விழா; சுற்றுச்சூழலை காக்க விழிப்புணர்வு
ADDED : பிப் 23, 2024 11:16 PM
குன்னுார்:குன்னுார் ஜோசப் மேல்நிலை பள்ளியில், 135வது ஆண்டு விழா நடந்தது. விழாவில், பெங்களூரு ஐ.ஐ.எம்., நிறுவன முதன்மை அதிகாரி மனோஜ் சக்ரவர்த்தி துவக்கி வைத்து பேசினார்.
கல்வி, விளையாட்டு உட்பட பல்வேறு போட்டிகளில் முதல், 3 இடங்களை பிடித்த மாணவ மாணவியருக்கு, கீதா சக்ரவர்த்தி சான்றிதழ்கள், நினைவு பரிசுகள் வழங்கினார்.
நம் பூமி, நம் வீடு; நம் தாய்பூமியை காப்போம் என்ற தலைப்புகளில், 700 மாணவ, மாணவியர் கலை நிகழ்ச்சியில் பங்கேற்றனர். 'இயற்கை வளம், வன விலங்குகள் பாதுகாப்பு, மனித விலங்கு மோதல், பிளாஸ்டிக் ஒழிப்பு, துாய்மை,' என்பதை வலியுறுத்தும் நாடகங்கள் இடம் பெற்றன.
பள்ளி முதல்வர் அருட்சகோதரர் ஜேக்கப் ஜோசப், தலைமையாசிரியர் அருட்சகோதரர் பாஸ்கா, இல்ல சபை தலைவர் அருட்சகோதரர் டேமியன் வர்கீஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.