/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ லாரியில் அறை அமைத்து கடத்திய 1,155 லிட்டர் எரிசாராயம் பறிமுதல் லாரியில் அறை அமைத்து கடத்திய 1,155 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்
லாரியில் அறை அமைத்து கடத்திய 1,155 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்
லாரியில் அறை அமைத்து கடத்திய 1,155 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்
லாரியில் அறை அமைத்து கடத்திய 1,155 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்
ADDED : ஜூன் 03, 2025 11:22 PM

பாலக்காடு; பாலக்காடு அருகே, லாரியில் கடத்தி வந்த, 1,155 லிட்டர் எரிசாராயம் போலீசார் பறிமுதல் செய்தனர்.
கேரளா மாநிலம், பாலக்காடு எஸ்.பி., அஜித்குமார் உத்தரவின் பேரில், போதை தடுப்பு பிரிவு டி.எஸ்.பி., அப்துல்முனீர் மற்றும் சித்தூர் டி.எஸ்.பி., கிருஷ்ணதாஸ் மேற்பார்வையில், கொழிஞ்சாம்பாறை போலீஸ் இன்ஸ்பெக்டர் அருண்குமார் மற்றும் போலீசார், நேற்று முன்தினம் இரவு கொழிஞ்சாம்பாறை நீலாங்கச்சி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, பொள்ளாச்சியில் இருந்து பாலக்காடு நோக்கி வந்த கே.எல்.,7 சி.க்யூ., 6378 என்ற கேரளா பதிவு எண் கொண்ட லாரியை நிறுத்தி சோதனையிட்டனர்.
லாரியின் பின்பக்கம், சிறப்பு அறைக்குள், 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 33 பிளாஸ்டிக் கேன்களில், 1,155 லிட்டர் எரிசாராயம் பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, திருச்சூர் மாவட்டம் அந்திக்காடு மாங்காட்டுக்கரை பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் ஷைஜு,49, என்பவரை கைது செய்தனர்.
எரிசாராயம் எங்கிருந்து, யாருக்கு கடத்தி செல்லப்படுகிறது என்பது குறித்து ஷைஜுவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.