/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ மண்டல வாலிபால் போட்டி: கோத்தகிரி ஜூட்ஸ் பள்ளி வெற்றி மண்டல வாலிபால் போட்டி: கோத்தகிரி ஜூட்ஸ் பள்ளி வெற்றி
மண்டல வாலிபால் போட்டி: கோத்தகிரி ஜூட்ஸ் பள்ளி வெற்றி
மண்டல வாலிபால் போட்டி: கோத்தகிரி ஜூட்ஸ் பள்ளி வெற்றி
மண்டல வாலிபால் போட்டி: கோத்தகிரி ஜூட்ஸ் பள்ளி வெற்றி
ADDED : ஜூலை 24, 2024 11:41 PM

கோத்தகிரி : தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி உள்ளடக்கிய மண்டல அளவிலரான வாலிபால் போட்டியில், ஜூட்ஸ் பள்ளி வெற்றி பெற்றது.
இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுக்கான கவுன்சில் சார்பில், கோத்தகிரி ஜூட்ஸ் பள்ளியில், மண்டல அளவிலான வாலிபால் போட்டி நடந்து வருகிறது.
இப்போட்டி தொடரில், நீலகிரி, கோவை மற்றும் மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து, 20 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.
போட்டியை, குன்னுார் வெலிங்டன் ராணுவ கல்லுாரி நேச்சர் அமைப்பின் முத்துக்குமார் துவக்கி வைத்தார்.
தொடர்ந்து. நடந்த போட்டியில், 19 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில், கோத்தகிரி ஜூட்ஸ் பள்ளி மற்றும் துாத்துக்குடி வைசாகா பள்ளிகளுக்கு இடையே போட்டி நடந்தது. அதில், ஜூட்ஸ் பள்ளி, 25:11, 25:12 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றது.
மாணவியர் பிரிவில், கோத்தகிரி ஐ.சி.எஸ்., பள்ளி மற்றும் கோவை ஈஷா ஹோம் பள்ளி பணிகள் மோதின. இதில், ஈஷா பள்ளி வெற்றி பெற்றது.
பள்ளி முதல்வர் சரோ தன்ராஜ், நிர்வாக இயக்குனர் சம்ஜித் தன்ராஜ் உங்கள ஆசிரியர்கள் மாணவர்கள் பங்கேற்றனர்.


