/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ நுாதன மோசடியில் ஈடுபட்ட ராஜஸ்தான் வாலிபர்கள் கைது நுாதன மோசடியில் ஈடுபட்ட ராஜஸ்தான் வாலிபர்கள் கைது
நுாதன மோசடியில் ஈடுபட்ட ராஜஸ்தான் வாலிபர்கள் கைது
நுாதன மோசடியில் ஈடுபட்ட ராஜஸ்தான் வாலிபர்கள் கைது
நுாதன மோசடியில் ஈடுபட்ட ராஜஸ்தான் வாலிபர்கள் கைது
ADDED : ஜூலை 13, 2024 12:59 AM

ஊட்டி:நீலகிரி மாவட்டம் ஊட்டியைச் சேர்ந்தவர் முரளி. இவர் தன் 'பேஸ்புக்' பக்கத்தில் கடந்த மாதம் ஒரு தகவல் வந்துள்ளது. அதில், 'சென்னையில் சி.ஆர்.பி.எப்.,ல் பணிபுரியும் வீரர் பணிமாறுதலில் செல்வதால், அவரிடம் இருக்கும் வீட்டு உபயோக பொருட்களை குறைந்த விலைக்கு வாங்கிக் கொள்ளலாம்' என அதில் கூறப்பட்டு இருந்தது.
அதைப் பார்த்த முரளி, அதில் குறிப்பிட்டிருந்த எண்ணுக்குப் பேசி, அவர்கள் கூறிய வங்கிக் கணக்குக்கு 1.25 லட்சம் ரூபாய் அனுப்பினார். ஆனால், அதன்பின் அந்த எண்ணை தொடர்பு கொள்ள முடியவில்லை.
இதையடுத்து, கடந்த மாதம் 14ம் தேதி ஊட்டி 'சைபர் கிரைம்' போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்குப் பதிவு செய்து வங்கி கணக்கு எண்ணை வைத்து விசாரித்தனர். மோசடி கும்பல் ராஜஸ்தான் மாநிலத்தில் இருப்பதைக் கண்டுபிடித்தனர். கடந்த 3ம் தேதி ராஜஸ்தானுக்கு தனிப்படை போலீசார் சென்றனர்.
அங்கு, உள்ளுர் போலீஸ் உதவியுடன் டீக் மாவட்டம், உப்ரித்தி முகலா பகுதியைச் சேர்ந்த வாலக்கா, 37, சோகேல், 21, ஆகிய இருவரையும் கைது செய்து ஊட்டிக்கு அழைத்து வந்தனர். இருவரிடமும் கிடுக்கிப்பிடி விசாரணை நடக்கிறது.