/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ இரு சக்கர வாகனம் திருடிய வாலிபர் கைது இரு சக்கர வாகனம் திருடிய வாலிபர் கைது
இரு சக்கர வாகனம் திருடிய வாலிபர் கைது
இரு சக்கர வாகனம் திருடிய வாலிபர் கைது
இரு சக்கர வாகனம் திருடிய வாலிபர் கைது
ADDED : ஜூலை 08, 2024 12:15 AM
ஊட்டி:இரு சக்கர வாகனத்தை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ஊட்டி எல்க்ஹில் பகுதியை சேர்ந்தவர் ஜீவா, இவர் கோழிக்கடையில் வேலை செய்து வருகிறார். கடந்த இரு நாட்களுக்கு முன்பு தனது இரு சக்கர வாகனத்தை ஊட்டி ஏ.டி.சி., பகுதியில் நிறுத்தி விட்டு சென்றார். பின் வந்து பார்த்த போது இரு சக்கர வாகனம் காணவில்லை.
ஊட்டி, பி1 போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். சம்பவ இடத்தில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு மேற்கொண்டனர். இரு சக்கர வாகனத்தை திருடி சென்றது லவ்டேல் ரிச்சிங்காலனி பகுதியை சேர்ந்த பால்நீமன், 25, என்பது தெரியவந்தது. கைது செய்த போலீசார் இரு சக்கர வாகனத்தை மீட்டனர்.