/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ கேரளாவுக்கு 16 கிலோ கஞ்சா கடத்திய வாலிபர் கைது கேரளாவுக்கு 16 கிலோ கஞ்சா கடத்திய வாலிபர் கைது
கேரளாவுக்கு 16 கிலோ கஞ்சா கடத்திய வாலிபர் கைது
கேரளாவுக்கு 16 கிலோ கஞ்சா கடத்திய வாலிபர் கைது
கேரளாவுக்கு 16 கிலோ கஞ்சா கடத்திய வாலிபர் கைது
ADDED : ஜூன் 04, 2024 12:19 AM

பந்தலுார்;கர்நாடகாவில் இருந்து கேரளாவுக்கு, 16 கிலோ கஞ்சா கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
தமிழக கேரளா எல்லை பகுதியாக, பந்தலுார் அருகே பாட்டவயல் சோதனை சாவடி உள்ளது. இதன் அருகே, கேரளா மாநிலம் வயநாடு மாவட்டம், முத்தங்கா சோதனை சாவடி அமைந்துள்ளது.
கர்நாடக மாநிலம் குண்டல்பேட் பகுதியில் இருந்து, வயநாடு மற்றும் கோழிக்கோடு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சோதனை சாவடியில், நேற்று முன்தினம் வயநாடு மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் பிரசாந்த் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, பெங்களூரூவில் இருந்து, கோழிக்கோடு நோக்கி சென்ற தனியார் பஸ்சில் மூன்று பைகளில் கஞ்சா மறைத்து கடத்தி செல்வது தெரிய வந்தது. ஆய்வு செய்ததில், 16 கிலோ கஞ்சா இருந்ததும், அதனை மலப்புரம், குட்டிப்புரம் பகுதியை சேர்ந்த முகமது ஹாரிஸ்,34, என்பவர் பெங்களூவில் இருந்து கடத்தி செல்வதும் தெரியவந்தது.
விசாரணையில், 'அவர் கேரள மாநிலம் மலப்புரம் மற்றும் அதனை ஒட்டிய, தமிழக எல்லை பகுதியில் உள்ள, நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், சில்லரை விற்பனையில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார்,' என்பதும் தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார், கஞ்சாவை பறிமுதல் செய்து, சிறையில் அடைத்தனர்.
இதை தொடர்ந்து, கேரளா; கர்நாடகா; தமிழக எல்லையில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.