/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ உலக யோகா தினம் மாணவர்களுக்கு பயிற்சி உலக யோகா தினம் மாணவர்களுக்கு பயிற்சி
உலக யோகா தினம் மாணவர்களுக்கு பயிற்சி
உலக யோகா தினம் மாணவர்களுக்கு பயிற்சி
உலக யோகா தினம் மாணவர்களுக்கு பயிற்சி
ADDED : ஜூன் 22, 2024 12:07 AM

பந்தலுார்;உலக யோகா தினத்தை முன்னிட்டு, பந்தலுார் அருகே, உப்பட்டி பாரத மாதா மேல்நிலை பள்ளியில் மாணவர்களுக்கு யோகா பயிற்சி துவக்க விழா பள்ளி வளாகத்தில் நடந்தது.
பள்ளி முதல்வர் பிஜூ வரவேற்றார். தாளாளர் பாதர் ஜார்ஜ் தலைமை வகித்தார். யோகா உதவி பேராசிரியர் விஜயா, பயிற்சியாளர் சுலோச்சனா ஆகியோர் பயிற்சி அளித்தனர்.
அதில், 'மாணவர்களுக்கு அறிவுத்திறனை மேம்படுத்துதல், நினைவாற்றலை பெருக்குதல், சுறுசுறுப்பு ஏற்படுத்தி படிப்பில் நாட்டம் செலுத்துதல்,' போன்ற யோகா பயிற்சிகளை வழங்கினர்.
உதவி பேராசிரியர் விஜயா பேசுகையில், ''மாணவ பருவத்தில் யோகா, செய்வதன் மூலம் சுறுசுறுப்பும், தேர்வுகளில் எளிதாக சாதிக்கவும் வழி ஏற்படுத்தும்,'' என்றார்.
பள்ளி நிர்வாகிகள் கூறுகையில்,'இனி பள்ளியில் யோகா பயிற்சி தொடர்ந்து வழங்கப்படும்,' என்றனர்.