/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு பேரணி உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு பேரணி
உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு பேரணி
உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு பேரணி
உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு பேரணி
ADDED : ஜூன் 05, 2024 09:47 PM

மேட்டுப்பாளையம் : உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மேட்டுப்பாளையத்தில் வனத்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
உலக சுற்றுச்சூழல் தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு மேட்டுப்பாளையம் வனத்துறை சார்பில், மேட்டுப்பாளையம் வனச்சரகர் ஜோசப் ஸ்டாலின் தலைமையில், மேட்டுப்பாளையம் உழவர் சந்தையில் இருந்து தமிழ்நாடு பாரா மெடிக்கல் இன்ஸ்டி டியூட் வரை சுமார் 3 கிலோ மீட்டர் தூரம், விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் உழவர் சந்தை நிர்வாகிகள், வனப்பணியாளர்கள், கல்லூரி மாணவிகள் என 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பேரணியின் போது, பிளாஸ்டிக்கை ஒழிப்போம், வீட்டில் ஒரு மரம் நடுவோம் மழை பெறுவோம், வனம் இல்லை என்றால் மனித இனம் இல்லை என்ற விழிப்புணர்வு பதாகைகளை பேரணியில் சென்றவர்கள் ஏந்தி கோஷமிட்டனர்.