/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ கொய்மலர் குடில் காற்றில் சேதம்; சிறு விவசாயிகளுக்கு இழப்பு கொய்மலர் குடில் காற்றில் சேதம்; சிறு விவசாயிகளுக்கு இழப்பு
கொய்மலர் குடில் காற்றில் சேதம்; சிறு விவசாயிகளுக்கு இழப்பு
கொய்மலர் குடில் காற்றில் சேதம்; சிறு விவசாயிகளுக்கு இழப்பு
கொய்மலர் குடில் காற்றில் சேதம்; சிறு விவசாயிகளுக்கு இழப்பு
ADDED : ஜூலை 25, 2024 10:04 PM

கோத்தகிரி: கோத்தகிரி அருகே சூறை காற்றில் கொய்மலர் குடில் கிழிந்து சேதம் அடைந்ததால், விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில், தென்மேற்கு பருவ மழையுடன், ஆடிமாத சூறை காற்று வீசி வருகிறது. இதனால், தேயிலை தோட்டங்களில் சில்வர் ஓக் மற்றும் சாலையோரங்களில் ஆங்காங்கே மரங்கள் விழுந்து வருகின்றன. கடுமையான குளிர் நிலவுவதால், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோத்தகிரி புறநகர் பகுதியில் அமைந்துள்ள பில்லிக்கம்பை பகுதியில் காற்றின் வேகம் அதிகரித்தது. அதில், பில்லிகம்பை கிராமத்தை சேர்ந்த சரஸ்வதி என்பவரது கொய்மலர் குடில், சூறை காற்றில் கிழிந்து அடித்து செல்லப்பட்டது. விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, இழப்பீடு வழங்க வேண்டும்.