/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ 'கும்கி' யானைகள் உதவியுடன் காட்டு யானை விரட்டும் பணி 'கும்கி' யானைகள் உதவியுடன் காட்டு யானை விரட்டும் பணி
'கும்கி' யானைகள் உதவியுடன் காட்டு யானை விரட்டும் பணி
'கும்கி' யானைகள் உதவியுடன் காட்டு யானை விரட்டும் பணி
'கும்கி' யானைகள் உதவியுடன் காட்டு யானை விரட்டும் பணி
ADDED : ஜூலை 13, 2024 08:37 AM

கூடலுார், : கூடலுார், தேவர்சோலை மற்றும் அதனை ஒட்டிய குடியிருப்பு பகுதிகளில் காட்டு யானைகள் இரவில் நுழைந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி மக்களை அச்சுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், அஞ்சுகன்னு பகுதியில் நேற்று முன்தினம், அதிகாலை மணி என்பவரின் ஆட்டோவை காட்டு யானை சேதப்படுத்தியது. பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி, அஞ்சுகுன்னு பகுதி கிராம மக்கள் நேற்று முன்தினம், உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில், 'முதுமலை 'கும்கி' யானைகள் உதவியுடன், காட்டு யானைகளை வனப்பகுதிக்கு விரட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,' என, அதிகாரிகள் உறுதி அளித்தனர். தொடர்ந்து, முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமிலிருந்து 'கும்கி' யானைகள் வசிம், சீனிவாசன் ஆகியவை தேவர்சோலை பகுதிக்கு அழைத்துவரப்பட்டன. இந்நிலையில், நேற்று வனச்சரகர் ராதாகிருஷ்ணன் தலைமையில், வனவர் வீரமணி மற்றும் 30 வன ஊழியர்கள், 'கும்கி' யானைகள் உதவியுடன், காட்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். இவர்களுடன், 10 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வனத்துறையினர் கூறுகையில், 'காட்டு யானைகளை கண்காணித்து 'கும்கி' யானைகள் உதவியுடன் விரட்டும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வனத்துறைக்கு பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும்,' என்றனர்.