குண்டாடா பள்ளி மாணவர்களுக்கு சீருடை
குண்டாடா பள்ளி மாணவர்களுக்கு சீருடை
குண்டாடா பள்ளி மாணவர்களுக்கு சீருடை
ADDED : ஜூலை 05, 2024 01:29 AM
கோத்தகிரி;கோத்தகிரி குண்டாடா அரசு நடுநிலைப்பள்ளி மாணவர்கள், 50 ேபருக்கு, குண்டாடா கிராமத்தை சேர்ந்த பள்ளி முன்னாள் மாணவர் குமார், தனது சொந்த செலவில், 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சீருடைகளை வழங்கினார்.
'இந்த அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி சார்ந்த அனைத்து உதவிகளையும் செய்து தருவதாகவும் உறுதி' அளித்தார்.
நிகழ்ச்சிக்கு, பட்டதாரி ஆசிரியை மல்லிகா குமார் தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் (பொ) ரோஸ்லின் ஜெபசெல்வி முன்னிலை வகித்தார். ஆசிரியைகள் அனிதாமாலா , தனலட்சுமி, சுமித்ரா, ராஜலட்சுமி உட்பட, பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.