/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ துார்வாரப்படாத 'செக்டேம்' வறட்சியில் விலங்குகளுக்கு சிக்கல் துார்வாரப்படாத 'செக்டேம்' வறட்சியில் விலங்குகளுக்கு சிக்கல்
துார்வாரப்படாத 'செக்டேம்' வறட்சியில் விலங்குகளுக்கு சிக்கல்
துார்வாரப்படாத 'செக்டேம்' வறட்சியில் விலங்குகளுக்கு சிக்கல்
துார்வாரப்படாத 'செக்டேம்' வறட்சியில் விலங்குகளுக்கு சிக்கல்
ADDED : ஜூன் 25, 2024 01:16 AM

கோத்தகிரி;நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில், வனப்பகுதியை ஒட்டி, வனவிலங்குகள் வறட்சி நாட்களில் தண்ணீர் பருக எதுவாக, வனத்துறை சார்பில் சிறிய 'செக்டேம்கள்' கட்டப்படுகிறது. அதற்காக, பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படுகிறது.
இதனால், வறட்சி நாட்களில் வன விலங்குகள் தண்ணீர் பருகி வந்ததுடன், உணவு மற்றும் தண்ணீருக்காக, அவை குடியிருப்பு பகுதிகளை தேடி வருவது தவிர்க்கப்பட்டு, விலங்கு-மனித மோதல் குறைந்திருந்தது.
இந்நிலையில், வனப்பகுதியை ஒட்டி சாலை ஓரங்களில் கட்டப்பட்ட செக்டேம்கள் துார்வாரப்படாமல், புல் மற்றும் காட்டு செடிகள் முளைத்துள்ளன. இதனால், மழை நீர் சேகரமாகாமல் வறட்சி நாட்களில் வன விலங்குகளுக்கு தண்ணீர் தட்டுப்பாடு அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், விலங்குகள் வனப்பகுதியில் இருந்து குடியிருப்பு பகுதிகளுக்கு வருவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது.
எனவே, வனத்துறையினர் விலங்குகளுக்காக கட்டப்பட்ட செக்டேம்களை துார்வார நடவடிக்கை எடுப்பது அவசியம்.