/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ அகற்றப்படாத 'பிளாஸ்டிக்' பாட்டில்கள்: சுற்றுச்சூழல் பாதிப்பு அகற்றப்படாத 'பிளாஸ்டிக்' பாட்டில்கள்: சுற்றுச்சூழல் பாதிப்பு
அகற்றப்படாத 'பிளாஸ்டிக்' பாட்டில்கள்: சுற்றுச்சூழல் பாதிப்பு
அகற்றப்படாத 'பிளாஸ்டிக்' பாட்டில்கள்: சுற்றுச்சூழல் பாதிப்பு
அகற்றப்படாத 'பிளாஸ்டிக்' பாட்டில்கள்: சுற்றுச்சூழல் பாதிப்பு
ADDED : ஜூலை 27, 2024 01:52 AM

பந்தலுார்;தமிழக எல்லையோர பகுதிகளில், செயல்படும் சோதனை சாவடிகளில் போலீசார் மற்றும் வனத்துறையினர் மட்டுமின்றி, தற்போது இ-பாஸ், நுழைவு வரி வசூல் போன்றவற்றிலும் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
அதில், பெரும்பாலான சோதனை சாவடிகளில் கேரளா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும், தமிழக எல்லைக்குள் வரும், வாகனங்களை யாரும் பரிசோதனை செய்வதில்லை.
இதனால், போதை பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் எளிதாக தமிழகத்திற்குள், கடத்தி வரப்படுகிறது. சோதனை சாவடிகளில் நுழைவு வரி வசூலில் ஈடுபட்டுள்ளவர்கள், தடை செய்யப்பட்டுள்ள 'பிளாஸ்டிக்' பாட்டில்கள் மற்றும் பைகள் கொண்டு வருவதையும் ஆய்வு செய்து அவற்றை பறிமுதல் செய்யும் பணியிலும் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
இவ்வாறு பறிமுதல் செய்யப்படும் 'பிளாஸ்டிக்' பாட்டில்கள் மற்றும் கவர்கள் சோதனை சாவடியை ஒட்டியுள்ள காலி இடங்களில் கொட்டி வைக்கப்படுகிறது. அதில், தாளூர் சோதனை சாவடியில் பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்கள், அதே பகுதியில் கொட்டி வைக்கப்பட்டு உள்ளது.அதனை சுற்றி முட்புதர்கள் சூழ்ந்து வரும் நிலையில், சுற்றுச்சூழல் பாதிப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது. எனவே, இவற்றை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.