/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ ஊட்டி ஏரியில் அனுமதியில்லாமல் சாகச விளையாட்டு பணிகள்; அதிரடியாக நிறுத்திய தேசிய பசுமை தீர்ப்பாயம் ஊட்டி ஏரியில் அனுமதியில்லாமல் சாகச விளையாட்டு பணிகள்; அதிரடியாக நிறுத்திய தேசிய பசுமை தீர்ப்பாயம்
ஊட்டி ஏரியில் அனுமதியில்லாமல் சாகச விளையாட்டு பணிகள்; அதிரடியாக நிறுத்திய தேசிய பசுமை தீர்ப்பாயம்
ஊட்டி ஏரியில் அனுமதியில்லாமல் சாகச விளையாட்டு பணிகள்; அதிரடியாக நிறுத்திய தேசிய பசுமை தீர்ப்பாயம்
ஊட்டி ஏரியில் அனுமதியில்லாமல் சாகச விளையாட்டு பணிகள்; அதிரடியாக நிறுத்திய தேசிய பசுமை தீர்ப்பாயம்

மாஸ்டர் சட்டம் மீறல்
ஏரியை ஒட்டி, மாநில அரசின் 'மாஸ்டர் பிளான்' சட்டத்தை மீறி, எவ்வித அனுமதியும் பெறாமல் பணிகள் நடந்து வருவதாக, நீலகிரி சுற்றுச்சூழல் சங்கங்களின் கூட்டமைப்பினர் போராட்டம் நடத்தினர். இது குறித்து, மத்திய, மாநில அரசுகளுக்கு புகார் மனு அனுப்பினர்.
மலை மேலிட பாதுகாப்புக்கு மதிப்பில்லை
நீலகிரி சுற்றுச்சூழல் சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அருண் பெள்ளி கூறுகையில்,'' மலை பகுதியின் சுற்றுச்சூழலை காக்க, மாநில அரசு கொண்டு வந்த 'மாஸ்டர் பிளான்' சட்டத்தின் படி, ஊட்டி தாவரவியல் பூங்கா; படகு இல்ல ஏரியை சுற்றி, 100 மீட்டர் சுற்றளவுக்கு எவ்வித கட்டுமானங்களும் கட்ட கூடாது.
தேசிய பசுமை தீர்ப்பாயம் தலையீடு
எங்கள் போராட்டத்துக்கு பின்பு, தேசிய பசுமை தீர்ப்பாயம் தானாக முன்வந்து, இந்த பணியை நிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. ஏரியை ஒட்டி, 10 மீட்டர் இடைவெளி கூட இல்லாமல் நடக்கும் இந்த பணியை நிறுத்த வேண்டும். தனியாருக்கு ஆதரவாக போடப்பட்ட இந்த திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். இல்லையெனில் மீண்டும் இந்த பிரச்னைக்காக கோர்ட் செல்ல உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.