ADDED : ஜூலை 10, 2024 12:35 AM
பாலக்காடு:பாலக்காடு அருகே, மானை வேட்டையாடி, சமைத்து சாப்பிட்ட வழக்கில் இருவரை வனத்துறையினர் கைது செய்தனர்.
கேரள மாநில வனத்துறைக்கு கிடைத்த தகவலின் பேரில், பாலக்காடு மாவட்டம், அட்டப்பாடி ஷோளயூர் ஊத்துக்குழி பகுதியில், ஷோளயூர் வனச்சரக அதிகாரி சஜீவன் தலைமையிலான வனத்துறையினர் சோதனை நடத்தினர்.
சோதனையில், ஒரு வீட்டினுள் இருவர் வேட்டையாடிய மானை, குழம்பு வைத்து சாப்பிடுவதை கையும் களவுமாக பிடித்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில், அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த செல்வன், 50, குப்பன், 40, என்பது தெரியவந்தது. கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய அவர்கள் இருவரையும், சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.