Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ உடல் வெப்பம், நோய் பாதுகாப்பு தரும் பழங்குடியினரின் மூங்கில் குருத்து உணவு

உடல் வெப்பம், நோய் பாதுகாப்பு தரும் பழங்குடியினரின் மூங்கில் குருத்து உணவு

உடல் வெப்பம், நோய் பாதுகாப்பு தரும் பழங்குடியினரின் மூங்கில் குருத்து உணவு

உடல் வெப்பம், நோய் பாதுகாப்பு தரும் பழங்குடியினரின் மூங்கில் குருத்து உணவு

ADDED : ஜூலை 13, 2024 10:57 PM


Google News
Latest Tamil News
கூடலுார்:முதுமலையில் வாழும் பழங்குடியினர், மழை காலத்தில், மூங்கில் குருத்தை சேகரித்து சமைத்து உண்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம், கூடலுார், முதுமலை பகுதியில் பூர்வகுடிகளான பணியர், குரும்பர், காட்டுநாயக்கன் இன பழங்குடி மக்கள் வனம் சார்ந்த கிரமங்களில் வசித்து வருகின்றனர். இவர்கள், சீசன் காலங்களில் வனத்தில் கிடைக்கும் பல வகை இயற்கை உணவு பயிர்களை சேகரித்து உண்டு வருகின்றனர்.

பெரும்பாலும் இவை பல்வேறு மருத்துவக் குணங்கள் இருப்பதால், பல நோய்களை தடுக்க முடியும் என்ற நம்பிக்கை அவர்களிடம் உள்ளது.

தற்போது, இப்பகுதியில் பருவ மழை பெய்து வரும் நிலையில் வயல்களில் காணப்படும் நண்டு, குளங்களில் உள்ள மீன்களை பிடித்து, மூங்கில் குருத்துகளுடன் சமைத்து உண்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

உடல் வெப்பத்தை சீராக்கும்:


மேலும், மூங்கில் குருத்துகளை சேகரித்து, அவற்றை சிறிய துண்டுகளாக வெட்டி, பருப்பு அல்லது தட்டப்பயறுடன் சேர்த்து சாம்பார் வைத்து பிற உணவுகளுடன் உட்கொண்டு வருகின்றனர்.

பழங்குடியினர் கூறுகையில், 'பருவமழை காலத்தில் மட்டுமே மூங்கில் குருத்துகள் கிடைக்கும். அவற்றை சேகரித்து சுத்தம் செய்து, தண்ணீரில் வேக வைத்த பின், அதிலிருந்து நீரை பிழிந்து எடுத்து விடுவோம். கசப்பு தன்மை போகும். தொடர்ந்து அதனை சமைத்து உட்கொண்டு வருகிறோம். இதனால், மழைக்காலத்தில் உடல் சூடாக இருக்கும். சீசன் கால நோய்கள் வருவதையும் தடுக்க முடியும்' என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us