/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ இடி தாக்கி சேதமடைந்த 'டிரான்ஸ்பார்மர்' மாற்றம் இடி தாக்கி சேதமடைந்த 'டிரான்ஸ்பார்மர்' மாற்றம்
இடி தாக்கி சேதமடைந்த 'டிரான்ஸ்பார்மர்' மாற்றம்
இடி தாக்கி சேதமடைந்த 'டிரான்ஸ்பார்மர்' மாற்றம்
இடி தாக்கி சேதமடைந்த 'டிரான்ஸ்பார்மர்' மாற்றம்
ADDED : ஜூன் 21, 2024 12:37 AM

கூடலுார்:கூடலுார் இரும்புபாலம் பகுதியில், இடி தாக்கி சேதமடைந்த டிரான்ஸ்பார்மர் மாற்றப்பட்டதை தொடர்ந்து குடிநீர் வினியோகம் சீரானது.
கூடலுார் பகுதியில் அவ்வப்போது இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது.
அதில், இரும்புபாலம் பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மர் இடி தாக்கி சேதமடைந்தது. இதனால், அப்பகுதியில் மின் சப்ளை பாதிக்கப்பட்டது.
மின் சப்ளை இல்லாததால், நீரேற்றும் மோட்டார் இயக்க முடியாமல், இரும்புபாலம் குடிநீர் திட்டத்திலிருந்து, கூடலுார் நகராட்சியின், பல வாடுகளுக்கு குடிநீர் சப்ளை பாதிக்கப்பட்டது.
மின் சப்ளை இன்றி அப்பகுதியும் இரவு இருளில் மூழ்கியது. மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். சேதமடைந்த டிரான்ஸ்பார்மரை மாற்றி மின் சப்ளை வழங்க மக்கள் வலியுறுத்தினர்.
தொடர்ந்து, மின் ஊழியர்கள் சேதமடைந்த டிரான்ஸ்பார்மரை நேற்று அகற்றிவிட்டு, ஊட்டியில் இருந்து எடுத்து வந்த புதிய டிரான்ஸ்பார்மரை பொருத்தி மின் சப்ளை வழங்கினர்.
இரண்டு நாட்களுக்கு பின் குடிநீர் சப்ளை சீரானதால் மக்கள் நிம்மதி அடைந்தனர்.