/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ நீலகிரியில் மரம் விழுந்து போக்குவரத்து ஸ்தம்பிப்பு நீலகிரியில் மரம் விழுந்து போக்குவரத்து ஸ்தம்பிப்பு
நீலகிரியில் மரம் விழுந்து போக்குவரத்து ஸ்தம்பிப்பு
நீலகிரியில் மரம் விழுந்து போக்குவரத்து ஸ்தம்பிப்பு
நீலகிரியில் மரம் விழுந்து போக்குவரத்து ஸ்தம்பிப்பு
ADDED : ஜூலை 13, 2024 07:35 PM

குன்னுார்:நீலகிரி மாவட்டம், குன்னுார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் கன மழை பெய்தது. அதில், குன்னுார் - ஊட்டி சாலையில் பிளாக்பிரிட்ஜ் அருகே மரம் விழுந்தது.
நேற்று காலை மழையின் தாக்கம் குறைந்து பலத்த காற்று வீசியதில் காலை, 6:00 மணி அளவில் குன்னுார் - மஞ்சூர் சாலை கெந்தளா அருகே பெரிய அளவிலான கற்பூர மரம் விழுந்தது.
தகவலின்படி, குன்னுார் தீயணைப்பு நிலைய அலுவலர் குமார் மேற்பார்வையில் தீயணைப்பு வீரர்கள் மரங்களை வெட்டி அகற்றினர். இதனால், இரு சாலைகளிலும் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம், பந்தலுார் அருகே மாநில எல்லையில் சுல்தான் பத்தேரி, மற்றும் கர்நாடக மாநிலம் குண்டல்பேட் செல்லும் நெடுஞ்சாலையில், பாட்டவயல் சோதனை சோதனை சாவடி அருகே பெரிய மரம் ஒன்று சாலையின் குறுக்கே விழுந்தது.
இதனால், தமிழகம் - கேரளா - கர்நாடகா மாநிலங்கள் இடையே வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. சுல்தான் பத்தேரி தீயணைப்பு துறையினர் மற்றும் கேரளா வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து, மரத்தை அப்புறப்படுத்தினர். தொடர்ந்து, மூன்று மணி நேரத்துக்கு பின் போக்குவரத்து சீரானது.