/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ முதுமலையில் மழையிலும் சுற்றுலா பயணிகள் வருகை முதுமலையில் மழையிலும் சுற்றுலா பயணிகள் வருகை
முதுமலையில் மழையிலும் சுற்றுலா பயணிகள் வருகை
முதுமலையில் மழையிலும் சுற்றுலா பயணிகள் வருகை
முதுமலையில் மழையிலும் சுற்றுலா பயணிகள் வருகை
ADDED : ஜூலை 03, 2024 02:22 AM
கூடலுார்;முதுமலையில் மழை பெய்து வரும் நிலையில், வார இறுதி நாட்களில் தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
முதுமலையில் நடப்பாண்டு துவக்கம் முதல் பருவமழை ஏமாற்றியதால், வனப்பகுதி பசுமை இழந்தது. வனவிலங்குகள் உணவு குடிநீர் தேடி இடம்பெயர்ந்தன. கோடையில் இங்கு வந்த சுற்றுலா பயணிகள், பசுமை இழந்த வனப்பகுதியில் வனவிலங்குகளை பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
இந்நிலையில், மே மாதம் கோடை மழை பெய்தது தொடர்ந்து, வனப்பகுதி பசுமைக்கு மாறியது. வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்தது. கோடை விடுமுறை முடிந்து, பள்ளி கல்லுாரி துவங்கிய நிலையில், கடந்த மாதம் துவத்தில் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது.
இந்நிலையில் பருவமழை துவங்கிய நிலையில் வார இறுதி விடுமுறை நாட்களில், தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.
சுற்றுலாப் பயணிகள் கூறுகையில், 'பருவமழையின் போது, முதுமலைக்கு வருவதால் பசுமையான வனத்தையும் மிதமான காலநிலையும் ரசிக்க முடிகிறது. இதனால் கோடை காலத்தை விட பருவமழை காலத்தில் வருவது மறக்க முடியாத அனுபவமாக உள்ளது,' என்றனர்.