/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ மாயாறு நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு வியந்து ரசிக்கும் சுற்றுலாப் பயணிகள் மாயாறு நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு வியந்து ரசிக்கும் சுற்றுலாப் பயணிகள்
மாயாறு நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு வியந்து ரசிக்கும் சுற்றுலாப் பயணிகள்
மாயாறு நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு வியந்து ரசிக்கும் சுற்றுலாப் பயணிகள்
மாயாறு நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு வியந்து ரசிக்கும் சுற்றுலாப் பயணிகள்
ADDED : ஜூலை 16, 2024 12:48 AM
கூடலுார்;நீலகிரியில் பெய்து வரும் பருவ மழையை தொடர்ந்து, முதுமலை மாயாறு நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது.
கூடலுார் முதுமலை புலிகள் காப்பகம், நடுவட்டம் பகுதிகளில் பருவ மழை தீவிரமாக பெய்து வருகிறது. வனப்பகுதி பசுமைக்கு மாறி இருப்பதுடன் நிலத்தடி நீரும் உயர்ந்து வருகிறது. தொடரும் மழையில், கூடலுார் பாண்டியார்- புன்னம்புழா, முதுமலை மாயாறு ஆறுகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மாயாறு ஆற்றில் ஏற்பட்ட வெள்ள பெருக்கு காரணமாக, முதுமலை வட்ட சாலை, எம்.ஜி.ஆர்., டவர் அருகே உள்ள மாயார் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இதன் அழகை சுற்றுலா பயணிகள் வியந்து ரசித்து செல்கின்றனர்.
சுற்றுலா பயணிகள் கூறுகையில்,'முதுமலையில் தற்போது பெய்து வரும் பருவமழையால், வனப்பகுதி ரம்யமாக காட்சி அளிப்பதுடன், மாயாறு நீர்வீழ்ச்சியில் கொட்டும் தண்ணீர் மனதை கவர்ந்து வருகிறது,' என்றனர்.
வனத்துறையினர் கூறுகையில், 'இந்த நீர்வீழ்ச்சியில் பருவமழை காலத்தில் நீர் வரத்து அதிகமாக இருக்கும் என்பதால், இதன் அழகை முழுமையாக ரசிக்க முடியும்,' என்றனர்.