/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ குன்னத்துாரில் நாளை முகாம் மூன்று ஊராட்சி மக்கள் பங்கேற்பு குன்னத்துாரில் நாளை முகாம் மூன்று ஊராட்சி மக்கள் பங்கேற்பு
குன்னத்துாரில் நாளை முகாம் மூன்று ஊராட்சி மக்கள் பங்கேற்பு
குன்னத்துாரில் நாளை முகாம் மூன்று ஊராட்சி மக்கள் பங்கேற்பு
குன்னத்துாரில் நாளை முகாம் மூன்று ஊராட்சி மக்கள் பங்கேற்பு
ADDED : ஜூலை 29, 2024 02:48 AM
அன்னுார்;குன்னத்துாரில் வரும் 30ம் தேதி (நாளை) மூன்று ஊராட்சி மக்களுக்கு, 'மக்களுடன் முதல்வர்' முகாம் நடக்கிறது. இதில் மூன்று ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்கின்றனர்.
தமிழக அரசு, ஊரகப் பகுதிகளில், ஜூலை 15 முதல், செப். 14 வரை, 'மக்களுடன் முதல்வர்' முகாம் நடைபெறும் என அறிவித்துள்ளது. வருகிற 30ம் தேதி குன்னத்துாரில் உள்ள பழனியாண்டவர் கோவில் மண்டபத்தில் நடைபெறுகிறது.
இதில் குன்னத்துார், பச்சாபாளையம், நாரணாபுரம் ஆகிய மூன்று ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் குறைகள், கோரிக்கைகள் குறித்து உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.
காலை 10:00 மணி முதல், மதியம் 3:00 மணி வரை, மனுக்கள் பெறப்படும். இம்முகாமில், வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித் துறை, மின்வாரியம், ஆதி திராவிட நலத்துறை, வேளாண்மை, மருத்துவம், சமூக நலம், பிற்படுத்தப்பட்டோர் நலன், மாற்றுத்திறனாளிகள் துறை உள்ளிட்ட 15 துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.44 சேவைகள் வழங்கப்படுகின்றன.
'இங்கு தரப்படும் விண்ணப்பங்களுக்கு, 30 நாட்களுக்குள் தீர்வு அளிக்கும்படி அரசு அறிவுறுத்தியுள்ளது. எனவே மூன்று ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் உரிய ஆவணங்களுடன் குன்னத்துார் முகாமில் மனுக்கள் சமர்ப்பிக்கலாம்,' என ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.