/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ புலி நகம், பற்கள் பறிமுதல்: கூடலூரில் மூவர் கைது புலி நகம், பற்கள் பறிமுதல்: கூடலூரில் மூவர் கைது
புலி நகம், பற்கள் பறிமுதல்: கூடலூரில் மூவர் கைது
புலி நகம், பற்கள் பறிமுதல்: கூடலூரில் மூவர் கைது
புலி நகம், பற்கள் பறிமுதல்: கூடலூரில் மூவர் கைது
ADDED : ஜூன் 30, 2024 01:11 AM

கூடலுார்;கூடலூர் அருகே, விற்பனைக்காக வைத்திருந்த புலி நகம் மற்றும் பற்களை வனத்துறையினர் பறிமுதல் செய்து மூன்று பேரை கைது செய்தனர்.
நீலகிரி மாவட்டம், கூடலூர் நாடுகாணி பகுதியில், ஒரு கும்பல் புலி நகம் மற்றும் பற்களை பதுக்கி ரகசியமாக விற்பனை செய்ய முயன்றதாக ஊட்டி வன பாதுகாப்பு படைக்கு தகவல் கிடைத்தது. உதவி வன பாதுகாவலர் கிருபாகரன் மற்றும் வன ஊழியர்கள் ரகசிய விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், நாடுகாணி பகுதியில், சந்தேகத்துக்கு இடமான மூன்று நபர்களை நேற்று முன்தினம், வன பாதுகாப்பு படையினர் பிடித்து, சோதனை மேற்கொண்டனர். சோதனையில், அவர்கள், 17 புலி நகங்கள், 4 பற்களை விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்து தெரிய வந்தது. அதனை பறிமுதல் செய்து, மூவரையும் கைது செய்தனர்.
மேல்விசாரணைக்காக, அவர்கள் நாடுகாணி வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். கூடலூர் உதவி வன பாதுகாவலர் கருப்பையா, நாடுகாணி வனச்சரகர் வீரமணி மேற்கொண்ட விசாரணையில், அவர்கள் பாண்டியாறு குடோன் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியம், 44, சிமியோன், 53, பால்மேடு பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன், 43, என, தெரியவந்தது. தொடர்ந்து அவர்களிடம், வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.