/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ காட்டம்பட்டி குளத்தில் தன்னார்வலர்கள் அசத்தல் காட்டம்பட்டி குளத்தில் தன்னார்வலர்கள் அசத்தல்
காட்டம்பட்டி குளத்தில் தன்னார்வலர்கள் அசத்தல்
காட்டம்பட்டி குளத்தில் தன்னார்வலர்கள் அசத்தல்
காட்டம்பட்டி குளத்தில் தன்னார்வலர்கள் அசத்தல்
ADDED : ஜூலை 23, 2024 01:02 AM

அன்னுார்:காட்டம்பட்டி குளத்தில், கரை சீரமைக்கும் பணி நேற்றுமுன்தினம் நடைபெற்றது.
அன்னுார் அருகே காட்டம்பட்டி குளம் என்று அழைக்கப்படும் குன்னத்தூர் குளம் 140 ஏக்கர் பரப்பளவு கொண்டது.
அத்திக்கடவு திட்டத்திலும், இந்த குளம் சேர்க்கப்பட்டுள்ளது. அன்னுார் வட்டாரத்திலேயே அதிக பரப்பளவு கொண்டது இந்தக் குளம்.
எனினும் இந்த குளத்தில் பராமரிப்பு செய்யாததால் குளத்தின் கரைகள் சீரற்றும், மழைநீர் வரும் பாதையில் மண் மேடுகள் ஆக்கிரமித்தும் இருந்தன.
இதையடுத்து 2019ல் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து குளம் சீரமைப்பு பணியை துவக்கின. 2022ல் இங்கு 3,000 மரக்கன்றுகள் நடப்பட்டன. அவை தற்போது 15 அடி உயரத்திற்கு வளர்ந்து உள்ளன.
இந்நிலையில் பண்ணாரி அம்மன் சுகர்ஸ் மற்றும் சிவா டிஸ்டில்டர்ஸ் நிறுவனம் சார்பில் சமுதாயப் பொறுப்பு நிதியில் 25 லட்சம் ரூபாய் இந்த குளத்திற்கு வழங்கியுள்ளனர். இதையடுத்து கரை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. இயந்திரங்கள் வாயிலாக 1.30 கி.மீ., நீளமுள்ள கரை ஒழுங்குபடுத்தப்பட்டு வருகிறது.
குளத்தில் நடப்பட்ட மரக்கன்றுகளை சுற்றி உள்ள களைகளை அகற்றுதல், தண்ணீர் பாய்ச்சுதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்றன. கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் செயலாளர் சுரேஷ் மற்றும் தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.