/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ சாலையில் திரியும் மாடுகள் பிடிக்கும் பணி விறுவிறுப்பு சாலையில் திரியும் மாடுகள் பிடிக்கும் பணி விறுவிறுப்பு
சாலையில் திரியும் மாடுகள் பிடிக்கும் பணி விறுவிறுப்பு
சாலையில் திரியும் மாடுகள் பிடிக்கும் பணி விறுவிறுப்பு
சாலையில் திரியும் மாடுகள் பிடிக்கும் பணி விறுவிறுப்பு
ADDED : ஜூலை 05, 2024 01:56 AM

மேட்டுப்பாளையம்;மேட்டுப்பாளையம் நகர் பகுதியில் சாலை மற்றும் தெருக்களில் சுற்றி திரியும் மாடுகளை பிடிக்கும் பணி விறு விறுப்பாக நடந்து வருகிறது.
மேட்டுப்பாளையம் நகர் பகுதி, தெருக்கள் மற்றும் முக்கிய சாலைகளில் மாடுகள் எந்த வித கட்டுப்பாட்டுமின்றி உலா வருகிறது. சாலைகளில் மாடுகள் உலா வருவதால் விபத்து ஏற்படும் ஆபாயம் உள்ளது. தெருக்களில் மக்கள் நடந்து செல்லவே அச்சமடைகின்றனர்.
இதையடுத்து, மேட்டுப்பாளையம் நகராட்சி நிர்வாகத்தினர் மாடுகளை சாலைகள், தெருக்களில் மேய விட கூடாது என உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். ஆனாலும் மாடுகள் உலா வருவதை தடுக்க முடியவில்லை.
இந்நிலையில், மேட்டுப்பாளையம் நகராட்சி சார்பில் தனியார் ஒப்பந்ததாரர் வாயிலாக சாலைகள், தெருக்களில் உலா வரும் மாடுகளை பிடித்து வருகின்றனர். இப்பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இதுகுறித்து மேட்டுப்பாளையம் நகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், 'தெருக்கள், சாலைகளில் மக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு ஏற்படுத்தும் மாடுகள் பிடிக்கப்பட்டு வருகின்றன. முதல் முறை பிடிபடும் மாடு ஒன்றுக்கு ரூ.6 ஆயிரம் அபராதம் அதன் உரிமையாளர்களுக்கு விதிக்கப்படுகிறது.
இரண்டாம் முறை அதே மாடு பிடிப்பட்டால் ரூ.10 ஆயிரம் அபராதம். பிடிக்கப்படும் மாடுகளை உரிமையாளர்கள் 3 நாட்களுக்குள் அபராதம் கட்டி மீட்க வேண்டும். இல்லை என்றால் மாடுகள் கோசாலைகளுக்கு அனுப்பப்படும். தினமும் 2 முதல் 3 மாடுகள் வரை பிடிக்கப்படுகிறது,' என்றார்.-