/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ போராடிய யானை; ஓய்வெடுத்த புலி நீலகிரியில் அடுத்தடுத்த சுவாரஸ்யம் போராடிய யானை; ஓய்வெடுத்த புலி நீலகிரியில் அடுத்தடுத்த சுவாரஸ்யம்
போராடிய யானை; ஓய்வெடுத்த புலி நீலகிரியில் அடுத்தடுத்த சுவாரஸ்யம்
போராடிய யானை; ஓய்வெடுத்த புலி நீலகிரியில் அடுத்தடுத்த சுவாரஸ்யம்
போராடிய யானை; ஓய்வெடுத்த புலி நீலகிரியில் அடுத்தடுத்த சுவாரஸ்யம்
ADDED : ஜூன் 02, 2024 02:24 AM

கூடலுார்:நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டி கர்நாடகா பந்திப்பூர் புலிகள் காப்பகம் உள்ளது.
பந்திப்பூரில் கோடை மழையை தொடர்ந்து, வனப்பகுதி பசுமைக்கு மாறியுள்ளது. இங்கு வரும் சுற்றுலா பயணியர் அவ்வப்போது புலிகளை பார்த்து ரசித்து செல்கின்றனர்.
நேற்று முன்தினம், பந்திப்பூர் வனத்தில் பாறையின் மீது நான்கு குட்டிகளுடன் தாய்புலியும், நீரோடை அருகே 'ஹாயாக' புலி ஒன்று உறங்கி ஓய்வெடுத்துக் கொண்டிருந்ததை அங்கு வந்த சுற்றுலா பயணியர், வன ஊழியர்கள் ஆச்சரியத்துடன் கண்டு ரசித்தனர்.
அதேபோல், பந்தலுார், கொளப்பள்ளி அருகே குறிஞ்சி நகரில் சுற்றித்திரிந்த குட்டி யானை அங்குள்ள தரை கிணற்றில் தவறி விழுந்தது. குட்டியை பல இடங்களில் தேடிய தாய் யானை குறிஞ்சி நகர் கிணற்று பகுதியில் விழுந்ததை தெரிந்து கொண்டது.
எழ முடியாமல் குட்டி யானை தவித்துக் கொண்டிருந்ததை பார்த்த அப்பகுதி மக்கள், வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
வனத்துறையினர் சம்பவ பகுதிக்கு வந்து குட்டி யானையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். குட்டி யானையை கிணற்றிலிருந்து வெளியே எடுக்கும் வரை, தாய் யானை கிணற்றின் அருகே மண்டியிட்டு போராடிய காட்சி பலரையும் கண் கலங்க வைத்தது.
சமீப காலமாக கூடலுார், பந்தலுார் பகுதிகளில் வன விலங்குகளின் சுவாரஸ்ய காட்சிகளை காண வாய்ப்பு கிடைப்பதால், சுற்றுலா பயணியர் பரவசம் அடைந்து உள்ளனர்.