/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ சிறுத்தையை பிடிக்க கூண்டு வைத்து கண்காணிப்பு: மரங்களில் கேமரா பொருத்திய வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்க கூண்டு வைத்து கண்காணிப்பு: மரங்களில் கேமரா பொருத்திய வனத்துறையினர்
சிறுத்தையை பிடிக்க கூண்டு வைத்து கண்காணிப்பு: மரங்களில் கேமரா பொருத்திய வனத்துறையினர்
சிறுத்தையை பிடிக்க கூண்டு வைத்து கண்காணிப்பு: மரங்களில் கேமரா பொருத்திய வனத்துறையினர்
சிறுத்தையை பிடிக்க கூண்டு வைத்து கண்காணிப்பு: மரங்களில் கேமரா பொருத்திய வனத்துறையினர்
ADDED : ஜூன் 08, 2024 12:35 AM

கூடலுார்;கூடலுார் தேவர்சோலை அருகே, மக்களை அச்சுறுத்தி வரும் சிறுத்தையை பிடிக்க, தானியங்கி கேமராக்கள் மற்றும் கூண்டுகள் வைத்து வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
கூடலுார் தேவர்சோலை அருகே, பொன்வயல் கிராமத்தில் சுனில் என்பவர் வீட்டின் அருகே, நான்கு தினங்களுக்கு முன், சிறுத்தை பதுங்கி இருந்ததை பார்த்துள்ளனர். சிறிது நேரத்தில், சிறுத்தை அங்கிருந்து மெதுவாக நடந்து சென்றது. சிறுத்தை உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தது. மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
சிறுத்தை நடமாட்டம் உள்ள பொன்வயல், பாலம்வயல் உள்ளிட்ட பகுதிகளில் வனச்சரகர் ராதாகிருஷ்ணன், வனவர் வீரமணி, வன ஊழியர்கள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் கவச உடைய அணிந்து தனியார் வேலை தோட்டம் மற்றும் முற்புதர் பகுதிகளில், தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று முன்தினம், உதவி வன பாதுகாவலர் கருப்பையா, முதுமலை கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார், அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். வன ஊழியர்கள் பல பகுதிகளில் தேடியும் சிறுத்தை அவர்களுக்கு தென்படவில்லை.
இதனைத் தொடர்ந்து அப்பகுதிக்கு இரண்டு கூண்டுகள் கொண்டு வரப்பட்டு, தேயிலை தோட்டம் பகுதிகளில் வைக்கப்பட்டுள்ளது. கூண்டுக்குள் கோழி மற்றும் ஆடு கட்டி வைத்துள்ளனர். சிறுத்தையின் நடமாட்டம் மற்றும் அதன் உடல் நிலையை அறிந்து கொள்ளும் வகையில், இரண்டு இடங்களில் தானியங்கி கேமராக்கள் பொருத்தி கண்காணித்து வருகின்றனர்.
கூடலுார் உதவி வன பாதுகாவலர் கருப்பையா கூறுகையில், ''சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதிகளில் வன ஊழியர்கள் தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை, தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ள வன ஊழியர்களுக்கு சிறுத்தை தென்படவில்லை. தற்போது, சிறுத்தையை கண்காணிக்க தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், சிறுத்தை பிடிக்க இரண்டு இடங்களில் கூண்டுகள் வைத்து கண்காணித்து வருகிறோம். பொதுமக்கள் சிறுத்தை நடமாட்டம் குறித்து தெரிய வந்தால் வனத்துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். அவை மனிதர்களை தாக்கும் ஆபத்து உள்ளதால் அதன் அருகே செல்வதை தவிர்க்க வேண்டும்,'' என்றார்.