/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ ஓடை பள்ளத்தில் தவறி விழுந்த விவசாயி பலி ஓடை பள்ளத்தில் தவறி விழுந்த விவசாயி பலி
ஓடை பள்ளத்தில் தவறி விழுந்த விவசாயி பலி
ஓடை பள்ளத்தில் தவறி விழுந்த விவசாயி பலி
ஓடை பள்ளத்தில் தவறி விழுந்த விவசாயி பலி
ADDED : ஜூலை 22, 2024 02:07 AM
ஊட்டி;ஊட்டி அருகே ஓடை பள்ளத்தில் தவறி விழுந்த விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.
ஊட்டி புதுமந்து கோவில்மேடு பகுதியை சேர்ந்தவர் சேஷன். இவருடைய மகன் நவீன்குமார்,34, தந்தைக்கு உதவியாக விவசாய பணிகளை கவனித்து வந்தார்.
கடந்த சில நாட்களாக, ஊட்டியில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக ஆறு மற்றும் ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம், தோட்டத்திற்கு சென்ற நவீன் குமார் விவசாய பணிகளை செய்து கொண்டிருந்தபோது அருகில் இருந்த ஓடை பள்ளத்தில் தவறி விழுந்தார். அப்போது, தலை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது.
அங்கு இருந்த தண்ணீரில் மூழ்கி விட்டார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஊட்டி அரசு தலைமை மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
பரிசோதனை செய்த டாக்டர்கள் தலையில் அடிபட்டு தண்ணீரில் மூழ்கிதால் நவீன்குமார் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதை தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. ஓடை பள்ளத்தில் தவறி விழுந்து இறந்த சம்பவம் குறித்து தேனாடுகம்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதிகாரிகள் கூறுகையில், 'ஊட்டியில் பெய்து வரும் மழை காரணமாக நீரோடைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து வருகின்றது. இதனால் மக்கள் ஆற்று ஓரங்களில் செல்லும்போது முன்னெச்சரியாக செல்லவேண்டும்,' என்றனர்.