/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ பழங்குடியினருக்கு தண்ணீர் வினியோகம் நிறுத்தம்; பூட்டு போட்டு தடை ஏற்படுத்திய கொடுமை பழங்குடியினருக்கு தண்ணீர் வினியோகம் நிறுத்தம்; பூட்டு போட்டு தடை ஏற்படுத்திய கொடுமை
பழங்குடியினருக்கு தண்ணீர் வினியோகம் நிறுத்தம்; பூட்டு போட்டு தடை ஏற்படுத்திய கொடுமை
பழங்குடியினருக்கு தண்ணீர் வினியோகம் நிறுத்தம்; பூட்டு போட்டு தடை ஏற்படுத்திய கொடுமை
பழங்குடியினருக்கு தண்ணீர் வினியோகம் நிறுத்தம்; பூட்டு போட்டு தடை ஏற்படுத்திய கொடுமை
ADDED : ஜூன் 05, 2024 08:24 PM

பந்தலுார் : பந்தலுார் அருகே குதிரைவட்டம் பழங்குடியினர் கிராமத்திற்கு தண்ணீர் வினியோகம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
பந்தலுார் அருகே நெலாக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் குதிரை வட்டம் பழங்குடியின கிராமம் அமைந்துள்ளது.
இந்த பகுதிக்கு அருகில் உள்ள தனியார் ஒருவரின் தோட்டத்தில் கட்டப்பட்டுள்ள, குடிநீர் தொட்டியில் இருந்து ஊராட்சி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இங்கு தண்ணீர் திறக்கும் பணியை பழங்குடியினர் ஒருவர் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், 'அவர் தண்ணீர் திறக்க கூடாது,' என, பிற சமுதாயத்தை சேர்ந்த சிலர் தெரிவித்துள்ளனர். ஆனால், பழங்குடியின மக்கள் அதனை ஏற்றுக்கொள்ள மறுத்த நிலையில், தண்ணீர் தொட்டியில் இருந்து, பழங்குடியின கிராமத்திற்கு தண்ணீர் சப்ளை செய்யும், குழாயின் 'கேட்வால்வை' தனிநபர் ஒருவர் உடைத்து, அதனை பொருத்த இயலாத வகையில், பூட்டி வைத்துள்ளார்.
கண்டு கொள்ளாத ஊராட்சி
இதனால், பழங்குடியின மக்களுக்கு குடிநீர் கிடைக்காமல், வேறு ஒரு பகுதியில் உள்ள கிணற்றிலிருந்து தண்ணீரை சுமந்து வந்து பயன்படுத்துகின்றனர்.
இதுகுறித்து வார்டு உறுப்பினர் மூலம் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளுக்கு கிராம மக்கள் தகவல் தெரிவித்தும் யாரும் கண்டு கொள்ளவில்லை.
பழங்குடியின சங்க நிர்வாகி கூறுகையில், 'பழங்குடியின மக்களுக்கு குடிநீர் வினியோகத்தை நிறுத்திய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராமத்துக்கு குடிநீர் விநியோகத்தை தடை இல்லாமல் கிடைக்க செய்ய வேண்டும்,' என்றார்.
ஊராட்சி செயலாளர் செந்தில்குமார் கூறுகையில், ''இதுகுறித்து எந்த புகார் இதுவரை வரவில்லை. உரிய ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.