/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ பாலக்காடு மருத்துவக் கல்லுாரி மாணவர்கள் தொடர் போராட்டம் பாலக்காடு மருத்துவக் கல்லுாரி மாணவர்கள் தொடர் போராட்டம்
பாலக்காடு மருத்துவக் கல்லுாரி மாணவர்கள் தொடர் போராட்டம்
பாலக்காடு மருத்துவக் கல்லுாரி மாணவர்கள் தொடர் போராட்டம்
பாலக்காடு மருத்துவக் கல்லுாரி மாணவர்கள் தொடர் போராட்டம்
ADDED : ஜூன் 15, 2024 12:32 AM
பாலக்காடு;பாலக்காடு அரசு மருத்துவக் கல்லுாரிக்கு, ஆசிரியர்களை நியமனம் செய்து, அடிப்படை வசதிகள் மேம்படுத்த வேண்டும் என, மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கேரள மாநிலம், பாலக்காட்டில் பழங்குடியின நலத்துறையின் கீழ், 2014ல் காங்., ஆட்சிக் காலத்தில் சிறப்பு முன்னுரிமை அளித்து, பாலக்காடு மருத்துவக் கல்லுாரி செயல்பட துவங்கியது. 10 ஆண்டுகள் பூர்த்தி அடைந்த நிலையில், அரசு போதிய கவனம் செலுத்தாததால், கல்வி வசதியோ, அடிப்படை வசதிகளோ இல்லை.
இந்நிலையில், தேவைக்கேற்ப ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும், அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து, நேற்று முன்தினம் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, பிரச்சனைக்கு தீர்வு காண பழங்குடியினர் நல துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் மற்றும் கலெக்டர் சித்ரா தலைமையில், இரவு மூன்று மணி நேரத்துக்கு மேலாக பேச்சுவார்த்தை நடந்தது.
அப்போது, 'ஒரு மாதத்திற்குள் ஆப்ரேஷன் தியேட்டர் மற்றும் அவசர பிரிவு செயல்பட தேவையான நடவடிக்கைகள் எடுப்பதாகவும், ஆசிரியர்கள் நியமன விஷயத்தில் பொதுப்பணி துறையுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண முயற்சி செய்வோம்,' என, பேச்சுவார்த்தையின் போது அமைச்சர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
ஆசிரியர் நியமனம் குறித்து முடிவு எடுக்கப்படாததால், மாணவர்கள் தொடர் ஸ்டிரைக்கில் ஈடுபட தீர்மானித்தனர்.
கோரிக்கைகள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் தொடரும் என, அறிவித்த மாணவர்கள், கல்லுாரி முன்பாக நேற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.