Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/இ.கம்யூ., நிர்வாகி தற்கொலை கட்சி பிரமுகர் காரணமென புகார்

இ.கம்யூ., நிர்வாகி தற்கொலை கட்சி பிரமுகர் காரணமென புகார்

இ.கம்யூ., நிர்வாகி தற்கொலை கட்சி பிரமுகர் காரணமென புகார்

இ.கம்யூ., நிர்வாகி தற்கொலை கட்சி பிரமுகர் காரணமென புகார்

ADDED : ஜூலை 27, 2024 02:23 AM


Google News
Latest Tamil News
பாலக்காடு;இ.கம்யூ., கட்சி இளைஞர் அணி தலைவர் ஷாஹினா தற்கொலைக்கு, அவரது நண்பரும் அக்கட்சியின் பிரமுகர் காரணம் என, கணவன் புகார் தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், மண்ணார்க்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஷாஹிரனா 27. இவர், இ.கம்யூ., கட்சியின் இளைஞரணி மாவட்ட நிர்வாக குழு உறுப்பினராக இருந்தார். இவரது கணவன் முகமது சாதிக், வெளிநாட்டில் பணியாற்றுகிறார்.

கடந்த ஜூலை, 22ம் தேதி காலை ஷாஹிரனா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மண்ணார்க்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

இந்நிலையில் வெளிநாட்டில் இருந்து வந்த கணவன் சாதிக், தன் மனைவி தற்கொலை செய்து கொண்டதற்கு, ஷாஹினாவின் நண்பரும், இ.கம்யூ., கட்சி பிரமுகர் ஒருவர் தான் என, அக்கட்சியின் மாவட்ட செயலாளர் சுரேஷ்பாபு மற்றும் போலீசில் புகார் அளித்தார்.

இது குறித்து முகமது சாதிக் கூறுகையில், ''கட்சி பிரமுகர் ஒருவரால், ஷாஹினாவுக்கு பொருளாதார சுமை ஏற்பட்டது. எனது குடும்ப சொத்தை விற்று கிடைத்த பணத்தில் தான், அந்த பிரச்னையை தீர்த்தேன்.

அதன் பின், மனைவி பெயரில் தனிநபர் கடன் பெறப்பட்டுள்ளது. ஷாஹினா தற்கொலை செய்து கொள்ள காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்,'' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us