/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ புகையிலை பொருட்கள் பறிமுதல்: ஒருவர் கைது புகையிலை பொருட்கள் பறிமுதல்: ஒருவர் கைது
புகையிலை பொருட்கள் பறிமுதல்: ஒருவர் கைது
புகையிலை பொருட்கள் பறிமுதல்: ஒருவர் கைது
புகையிலை பொருட்கள் பறிமுதல்: ஒருவர் கைது
ADDED : ஜூலை 12, 2024 09:54 PM

கூடலுார்:கூடலுார் அருகே விற்பனைக்காக காரில் பதுக்கி வைத்திருந்த, 60,000 ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்களை, போலீசார் பறிமுதல் செய்து, ஒருவரை கைது செய்தனர்.
நீலகிரி மாவட்டம், கூடலுார், தேவர்சோலை சாலை இரண்டாவது மைல் பகுதியில் உள்ள பெட்டி கடையில், தமிழகத்தில் தடை செய்யப்பட்ட போதை, புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
எஸ்.ஐ.,கள் கபில்தேவ், மதன்குமார், போலீசார் ஷாபி, அன்பழகன் ஆகியோர் அப்பகுதியில் உள்ள மன்சூர் அலி, 32, என்பவரின் கடை மற்றும் காரை சோதனை செய்தனர். அதில், 83 பண்டல்களில் வைக்கப்பட்டிருந்த, 1,251 பாக்கெட்களில் போதை தரும் புகையிலை பொருட்கள் காரில் விற்பனைக்கு பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.
போலீசார் அவரை கைது செய்து, காருடன் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மதிப்பு, 60,000 ரூபாய்.
போலீசார் கூறுகையில், 'கைது செய்யப்பட்ட மன்சூர் அலி மீது ஏற்கனவே, இரு வழக்குகள் உள்ளன. இவரது கடையை 'சீல்' வைக்க உணவு பாதுகாப்பு துறைக்கு பரிந்துரை செய்யப்படும்' என்றனர்.