/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ இரண்டாவது சீசனுக்கு விதை சேகரிப்பு பணி இரண்டாவது சீசனுக்கு விதை சேகரிப்பு பணி
இரண்டாவது சீசனுக்கு விதை சேகரிப்பு பணி
இரண்டாவது சீசனுக்கு விதை சேகரிப்பு பணி
இரண்டாவது சீசனுக்கு விதை சேகரிப்பு பணி
ADDED : ஜூன் 13, 2024 11:29 PM

ஊட்டி : ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் இரண்டாவது சீசனுக்கு விதை சேகரிப்பு பணி நடந்து வருகிறது.
ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் ஆண்டுதோறும் ஏப்., மற்றும் மே மாதங்களில் கோடை சீசன் நடைபெறுகிறது. செப்., - அக்., மாதங்களில் இரண்டாம் சீசன் நடக்கிறது. நடப்பாண்டு கோடை சீசன் ஏப்., - மே மாதங்களில் நடந்தது.
சீசனுக்காக பூங்காவில் பல லட்சம் மலர் செடிகள் தயார்படுத்தப்பட்டது. சீசன் முடிந்ததால் நடவு செய்யப்பட்ட மலர் செடிகளில் இருந்து விதைகள் சேகரிக்கப்பட்டு பதப்படுத்தப்படுகிறது.
அதன்படி, ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள மலர் செடிகளில் இருந்து விதைகள் சேகரிக்கும் பணியில் பெண் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். சேகரிக்கப்படும் விதைகள் அனைத்தும் பதப்படுத்தப்பட்டு தாவரவியல் பூங்கா மற்றும் தமிழகம் மாளிகை பூங்காவில் உள்ள நர்சரிகளில் நடவு செய்யப்பட்டு நாற்றுக்கள் தயார் செய்யும் பணிகளும் தற்போது நடந்து வருகிறது.
பூங்கா நிர்வாகம் கூறுகையில், 'இரண்டாவது சீசன் செப்., மாதத்தில் நடக்க இருப்பதால் கடந்த சில நாட்களாக மலர் செடிகளில் இருந்து சேகரிக்கப்படும் விதைகளின் தரமான விதைகளை பிரித்து எடுத்து விதைப்பு பணிகள் நடந்து வருகிறது. இரண்டாவது சீசனுக்கு, 5 லட்சம் மலர் செடிகள் தயார்படுத்த திட்டமிட்டுள்ளோம்,' என்றனர்.