/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ காட்டம்பட்டி குளத்தில் விதைப்பந்துகள் காட்டம்பட்டி குளத்தில் விதைப்பந்துகள்
காட்டம்பட்டி குளத்தில் விதைப்பந்துகள்
காட்டம்பட்டி குளத்தில் விதைப்பந்துகள்
காட்டம்பட்டி குளத்தில் விதைப்பந்துகள்
ADDED : ஜூலை 03, 2024 02:26 AM
அன்னுார்;காட்டம்பட்டியில் உள்ள 140 ஏக்கர் குளத்தில் அடர்வனம் அமைக்கப்பட்டுள்ளது.
குளம் சீரமைப்பு பணி நடந்து வருகிறது. இத்துடன் குளத்தில் மேலும் மரங்கள் உருவாக விதைப்பந்து துாவ முடிவு செய்யப்பட்டது. மக்கள் நல சமூக ஆர்வலர்கள் அறக்கட்டளை மற்றும் வாகை சமூக சேவை இணைந்து, சக்தி மயூரன் நாட்டுப்புற கலைக்குழு உறுப்பினர்கள் வாயிலாக 2000க்கும் மேற்பட்ட விதைப்பந்துகள் குளத்தில் துாவப்பட்டன. இந்நிகழ்வில், டாக்டர் மல்லிகா தலைமை வகித்தார். ஊராட்சி துணைத் தலைவர் லட்சுமி காந்த், ஒன்றிய கவுன்சிலர் செல்வராஜ், அறக்கட்டளை தலைவர் சரவணகுமார், செயலாளர் சாந்தமூர்த்தி உள்பட 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.