/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ சுற்றுலா தலங்களை பார்வையிட 'சுற்று பேருந்து'; அடுத்த சீசனுக்கு கூடுதலாக இயக்க நடவடிக்கை அவசியம் சுற்றுலா தலங்களை பார்வையிட 'சுற்று பேருந்து'; அடுத்த சீசனுக்கு கூடுதலாக இயக்க நடவடிக்கை அவசியம்
சுற்றுலா தலங்களை பார்வையிட 'சுற்று பேருந்து'; அடுத்த சீசனுக்கு கூடுதலாக இயக்க நடவடிக்கை அவசியம்
சுற்றுலா தலங்களை பார்வையிட 'சுற்று பேருந்து'; அடுத்த சீசனுக்கு கூடுதலாக இயக்க நடவடிக்கை அவசியம்
சுற்றுலா தலங்களை பார்வையிட 'சுற்று பேருந்து'; அடுத்த சீசனுக்கு கூடுதலாக இயக்க நடவடிக்கை அவசியம்
ADDED : ஜூன் 05, 2024 08:31 PM

ஊட்டி : 'ஊட்டியில், சீசன் சமயத்தில் இயக்கப்படும் சுற்று பேருந்தால் சுற்றுலா பயணிகளுக்கு பயன் தருகிறது,' என, சுற்றுலா பயணிகள் தெரிவிக்கின்றனர்.
ஊட்டியில், கோடை சீசன் சமயத்தில் அரசு போக்குவரத்து கழக சார்பில், சுற்றுலா பயணிகளுக்காக சுற்று பேருந்து இயக்கப்படுகிறது.
இந்த சுற்று பேருந்து, ஊட்டி பஸ் ஸ்டாண்டிலிருந்து படகு இல்லம், பிங்கர்போஸ்ட், அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தொட்டபெட்டா சிகரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு, 100 ரூபாய் கட்டணத்தில் இயக்கப்பட்டு வருகிறது.
அதற்கான கார்டை வாங்கும் சுற்றுலா பயணிகள் ஊட்டியில் நிர்ணயிக்கப்பட்ட அனைத்து சுற்றுலா தலங்களுக்கு சென்று பார்வையிட்டு வரலாம். கடந்த ஒன்றரை மாதங்களாக இயக்கப்பட்டு வரும் சுற்று பேருந்து, இம்மாதம், 10 ம் தேதி வரை இயக்கப்படுகிறது.
ஊட்டிக்கு சுற்றுலா வரும் நடுத்தர மக்களுக்கு இந்த சுற்று பேருந்து மிகவும் பயனுள்ளதாக உள்ளது. கடந்த ஒன்றரை மாதங்களுக்கு மேலாக இயக்கப்பட்டு வரும் சுற்று பேருந்தில் பலர் பயணம் செய்துள்ளனர். இதன் மூலம் அரசு போக்குவரத்து கழகத்திற்கு. 1.10 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.
சேலம் சுற்றுலா பயணி வெங்கடேஷ் கூறுகையில், ''கோடை சீசன் சமயத்தில் ஊட்டிக்கு குடும்பத்துடன் சுற்றுலா வந்து செல்வதை ஆண்டு தோறும் வழக்கமாக கொண்டுள்ளேன். சுற்றுலா தலங்களை காண தனியார் வாகனங்களை எடுத்து சென்றால் வாடகை கட்டணம் அதிகமாக உள்ளது.
''எங்களை போன்ற நடுத்தர மக்களுக்கு சுற்று பேருந்து பெரும் பயனுள்ளதாக உள்ளது. நல்ல நிலையில் உள்ள பஸ்களை இயக்கினால் நன்றாக இருக்கும்,'' என்றார்.
பொது மேலாளர் கணபதி கூறுகையில், '' சுற்றுலா பயணிகளின் தேவைகேற்ப சுற்று பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இனி வரும் சீசனிலிருந்து அதிகளவில் சுற்று பேருந்து இயக்கப்படும்,'' என்றார்.