/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ ஆழ்கடல் ஆய்வுக்காக ரோபோ: பாலக்காடு ஐ.ஐ.டி., அசத்தல் ஆழ்கடல் ஆய்வுக்காக ரோபோ: பாலக்காடு ஐ.ஐ.டி., அசத்தல்
ஆழ்கடல் ஆய்வுக்காக ரோபோ: பாலக்காடு ஐ.ஐ.டி., அசத்தல்
ஆழ்கடல் ஆய்வுக்காக ரோபோ: பாலக்காடு ஐ.ஐ.டி., அசத்தல்
ஆழ்கடல் ஆய்வுக்காக ரோபோ: பாலக்காடு ஐ.ஐ.டி., அசத்தல்
ADDED : ஜூன் 21, 2024 12:31 AM
பாலக்காடு;ஆழ்கடல் ஆய்வுக்காக, பாலக்காடு ஐ.ஐ.டி., ரோபோ வாகனத்தை உருவாக்கி உள்ளது.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் கஞ்சிக்கோட்டில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடிட்யூட் ஆப் டெக்னாலஜியில் (ஐ.ஐ.டி.,), ஆழ்கடல் ஆய்வுக்கான ரோபோ வாகனத்தை உருவாக்கியுள்ளனர்.
இயந்திர பொறியியல் துறை பேராசிரியரும் ஐ.பி.டி.ஐ.எப்., பேராசிரியர் சாந்தகுமார் மோகன், மாண்டி ஐ.ஐ.டி., துணை பேராசிரியர் ஜெகதீஷ் கடியம் ஆகியோர் ஒருங்கிணைந்து இந்த ரோபோ வாகனத்தை உருவாக்கியுள்ளனர். ஆழ்கடலில், 300 மீட்டர் வரை ஆய்வு நடத்தி அதனின் தகவல்களை இந்த ரோபோ வாகனம் பரிமாறும் திறன் கொண்டது.
இதுகுறித்து, ஐ.ஐ.டி. இயக்குனர் சேஷாத்திரி சேகர் கூறியதாவது:
சாய்தல் திறன் கொண்டு, ஆறு திசையிலும் சுதந்திரமாக செயல்பட கூடியது இந்த ரோபோ வாகனம். இந்திய கடற்படை உதவியுடன், 30 மீட்டர் ஆழம் வரை கடலிலும், ஏரிகள் மற்றும் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் இந்த ரோபோ வாகனத்தின் சோதனை ஓட்டம் வெற்றி கரமாக நடந்து முடிந்தது.
இந்த ரோபோ வாகனம், பல்வேறு ஆழ்கடல், உள்நாட்டு நீர் பணிகள் மற்றும் ஆய்வுகளுக்கு பயன்படுத்தப்படலாம்.
தொழில்துறை அடிப்படையில் கடல் ரோபோ அமைப்பை உருவாக்குவது தொடர்பு கொண்டு ஆலோசனை நடந்து வருகிறது.
பாலக்காடு ஐ.ஐ.டி., டெக்னாலஜி ஐ ஹப் பவுண்டேஷன், மாண்டி ஐ.ஐ.டி.,யின் ஒத்துழைத்து இந்த ரோபோ வாகனத்தை உருவாக்கியுள்ளது.
மத்திய தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் உள்ள, நேஷனல் இன்டர்டிஸ்ப்ளினரி சைபர்-பிசிகல் சிஸ்டம்இதற்கான நிதி உதவியை அளித்துள்ளது. நாட்டின் அதிநவீன தொழில்நுட்ப வளர்ச்சியில் ஒரு பகுதியாக ஐ.ஐ.டி., உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.