/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ மார்க்கெட் நடைபாதையில் விரிசல் மின் கம்பத்துடன் துண்டிக்கும் அபாயம் மார்க்கெட் நடைபாதையில் விரிசல் மின் கம்பத்துடன் துண்டிக்கும் அபாயம்
மார்க்கெட் நடைபாதையில் விரிசல் மின் கம்பத்துடன் துண்டிக்கும் அபாயம்
மார்க்கெட் நடைபாதையில் விரிசல் மின் கம்பத்துடன் துண்டிக்கும் அபாயம்
மார்க்கெட் நடைபாதையில் விரிசல் மின் கம்பத்துடன் துண்டிக்கும் அபாயம்
ADDED : ஜூலை 19, 2024 02:39 AM

குன்னுார்;குன்னுார் நகராட்சி மார்க்கெட்டில், 724 கடைகள் உள்ளன. மார்க்கெட் வளாக பகுதிகளில் நகராட்சி சார்பில் பராமரிப்பு பணிகள் நடப்பதில்லை.
இந்நிலையில், மார்க்கெட் கழிப்பிடம் அருகே நடைபாதை விரிசல் ஏற்பட்டுள்ளது. அதில், உள்ள மின்கம்பமும் பெயர்ந்து விழும் அபாயம் உள்ளது.
தற்போது மழையின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், விரிசல் அதிகரித்து வருவதால் நடைபாதை துண்டிக்கும் அபாயம் உள்ளது.
இதன் அருகிலேயே மற்றொரு பகுதியிலும் பூமி உள்வாங்கி வருகிறது. எனவே, நகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.