/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 20, 2024 01:00 AM

பந்தலுார்;சேரம்பாடியில் ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பந்தலுார் அருகே சேரம்பாடி பகுதியில் தனியார் தேயிலை தோட்ட நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த பல ஆண்டுகளாக பணியாற்றி ஓய்வு பெற்ற, 200க்கும் மேற்பட்ட 'தொழிலாளர்களுக்கு, எஸ்டேட் நிர்வாகம் வழங்க வேண்டிய பண பலன்களை வழங்கவில்லை,' என, கூறப்படுகிறது.
எஸ்டேட் ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் இணைந்து, எஸ்டேட் நிர்வாகத்திடம் பேசும் தீர்வு கிடைக்கவில்லை.
இதனால், அதிருப்தியடைந்த தொழிலாளர்கள் ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் கூட்டமைப்பை துவங்கி, அதன் மூலமும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு தீர்வு காணப்படவில்லை.
இதனால், 'ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய, பண பலன்களை உடனடியாக வழங்க வேண்டும்,' என வலியுறுத்தி, சேரம்பாடி பஜாரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நிர்வாகி எம். சுப்பிரமணியம் வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் மாதவன் தலைமை வகித்து பேசுகையில், ''சேரம்பாடியில் செயல்படும் எஸ்டேட் நிர்வாகம் நஷ்டம் என்று கூறிவரும் அதே வேளையில், கேரளா மாநிலத்தில் இதே எஸ்டேட் நிர்வாகம் தொழிலாளர்கள் ஓய்வு பெற்ற, 15 நாட்களுக்குள், பண பலன்களை வழங்கி வருகிறது.
நஷ்டம் என்று கூறி வரும் எஸ்டேட் நிர்வாகம், பலவிதமான வளர்ச்சி பணிகளை பல கோடி ரூபாய் செலவில் பிற மாவட்டங்களில் செயல்படுத்தி வருகிறது.
எனவே, உடனடியாக ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு பண பலன்களை வழங்காவிட்டால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம்,'' என்றார்.
விஜயலட்சுமி, சந்திரசேகர், மணிகண்டன், நளினி, சர்புதீன், தீபக் ராம் உள்ளிட்டோர் விளக்கி பேசினார்கள். சுப்பிரமணியம் நன்றி கூறினார்.