/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் பண பலனுக்காக போராட்டம் ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் பண பலனுக்காக போராட்டம்
ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் பண பலனுக்காக போராட்டம்
ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் பண பலனுக்காக போராட்டம்
ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் பண பலனுக்காக போராட்டம்
ADDED : ஜூலை 29, 2024 11:43 PM

பந்தலுார்;பந்தலுார் அருகே ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் பண பலனுக்காக போராட்டம் நடந்தது.
பந்தலுார் அருகே சேரம்பாடி பகுதியில் செயல்படும் தனியார் தேயிலை தோட்டத்தில் கடந்த, 40 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வந்த தொழிலாளர்கள், வயது முதிர்வு காரணமாக ஓய்வு பெற்றனர். இவர்களுக்கு எஸ்டேட் நிர்வாகம் பிடித்தம் செய்துள்ள, பண பலன்களை வழங்காமல் இழுத்தடிப்பு செய்து வருகிறது.
இதனால், ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் பல்வேறு வகையிலும் பாதிக்கப்பட்டு உள்ளதுடன், பெரும்பாலான ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் உயிரிழந்தும் விட்டனர்.
எஸ்டேட் நிர்வாகம் நஷ்டத்தில் இயங்குவதாக கூறி, 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு தலா, 5,000 முதல் இரண்டு லட்சம் ரூபாய் வரை பண பலன்களை வழங்காமல் இழுத்தடிப்பு செய்து வருகிறது.
இந்த பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தி, நேற்று எஸ்டேட் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
இதை தொடர்ந்து, தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி, சேரம்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்புரத்தினம், சப்-இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் உள்ளிட்டோர் எஸ்டேட் பொது மேலாளர் பிரசாத் மூலம் எஸ்டேட் நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதில், '10 நாட்களுக்குள் எஸ்டேட் நிர்வாகம் மற்றும் தாசில்தார், போலீசார், தொழிலாளர் நலத்துறை அலுவலர் மத்தியில் பேச்சு வார்த்தை நடத்தி உரிய தீர்வு ஏற்படுத்தப்படும்,' என, முடிவு செய்யப்பட்டது.
அதனை ஏற்றுக் கொண்ட ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டனர். ஒருங்கிணைப்பாளர்கள் மாதவன், சுப்ரமணி, விஜயலட்சுமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.