/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ இத்தலாரில் மண் சரிவு குடியிருப்பு வாசிகள் அச்சம் இத்தலாரில் மண் சரிவு குடியிருப்பு வாசிகள் அச்சம்
இத்தலாரில் மண் சரிவு குடியிருப்பு வாசிகள் அச்சம்
இத்தலாரில் மண் சரிவு குடியிருப்பு வாசிகள் அச்சம்
இத்தலாரில் மண் சரிவு குடியிருப்பு வாசிகள் அச்சம்
ADDED : ஜூலை 17, 2024 08:34 PM

ஊட்டி:இத்தலாரில் குடியிருப்பை ஒட்டி ஏற்பட்ட மண் சரிவால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. சில நேரங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. ஊட்டி அருகே இத்தலார் பகுதியில் கனமழைக்கு, 30 அடி தூரத்திற்கு மண்சரிவு ஏற்பட்டுள்ளது. மண் சரிவு ஏற்பட்ட பகுதியை ஒட்டி ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. பெரிய அளவில் ஏற்பட்ட மண்சரிவால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். வருவாய் துறையினர் . நெடுஞ்சாலை துறையினர் அப்பகுதியில் ஆய்வு அறிவு மேற்கொண்டனர் அதே பகுதியில் ஏற்கனவே இதே போன்று பெரிய அளவில் மண் சரிவு ஏற்பட்டதால் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டு இருப்பதால் புவியியல் துறையினர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்,என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.